தமிழ்நாட்டுக்கு எப்போதும் நீட் தேர்வு வேண்டாம் என 25 ஆயிரம் பேர் கருத்து: நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 22, 2021

தமிழ்நாட்டுக்கு எப்போதும் நீட் தேர்வு வேண்டாம் என 25 ஆயிரம் பேர் கருத்து: நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்

சென்னை, ஜூன்22-  தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்று 25 ஆயிரம் பேர் ஆய்வுக் குழுவிடம் கருத்து தெரிவித்துள்ளனர் என்று நீட் ஆய்வுக் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி .கே.ராஜன் தெரிவித் தார்

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்படும் சாதகம், பாதகம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி .கே.ராஜன் தலைமையில் உயர் நிலைக் குழு ஒன்றை  முதலமைச்சர் மு..ஸ்டாலின் அமைத்துள்ளார். இந்த குழு நீட் தேர்வு  குறித்து ஆய்வு செய்து வருகிறது.  இதன் தொடர்ச் சியாக 15ஆம் தேதி  உயர் மட்டக் குழு சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் 3 ஆவது மாடியில் அமைந்துள்ள அலுவ லகத்தில் தனது முதல் ஆய்வுக் கூட்டத்தை கூட்டியது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களின்படி, தமிழ்நாட்டில் பொது மக்களிடம் கருத்து கேட்க  முடிவு செய்யப்பட்டது.   நீட் தொடர்பான தங்கள் கருத்துகளை பொதுமக்கள் 5 பக்கங்களுக்கு மிகாமல், அஞ்சல் வழி மூலமாகவோ, அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 23ஆம் தேதிக்குள்  தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது. 

இதையடுத்து, மேற்கண்ட  ஆய்வுக் குழுவின் இரண்டாவது கூட்டம்  நேற்று (21.6.2021) நடந்தது. அந்த கூட்டத்துக்கு பிறகு நீதிபதி .கே.ராஜன் கூறியதாவது:  நீட் தேர்வு தொடர்பான கருத்துகளை பொது மக்கள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 25 ஆயிரம் பேர் இதுவரை  கருத்து தெரி வித்துள்ளனர். பெரும்பாலானவர் களின் கருத்துகள் நீட் தேர்வு வேண் டாம் என்பதாக இருக்கிறது.  இதில் வேறுபட்ட கருத்துகள் வருவதற்கான வாய்ப்பு இருக்காது என்று எதிர் பார்க்கிறோம்.  இன்னும்  தகவல்களை திரட்டி வருகிறோம். பொதுமக்கள், கல்வியாளர்கள் தெரிவிக்கும் கருத் துகளை ஆய்வு செய்து அதற்கு பிறகு எங்கள் பரிந்துரைகளை நாங்கள் அரசுக்கு தெரிவிப்போம். பெரும் பாலும் பெற்றோரின் கருத்தை தாண்டி எங்கள் பரிந்துரை இருக்காது. அவர்களின் கருத்துகளை ஒட்டியே இருக்கும். அரசு நிர்ணயம் செய்துள்ள கால அவகாசத்துக்குள் கருத்து கேட்கப்படும். தேவைப்பட்டால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்போம்.  இவ்வாறு நீதிபதி .கே.ராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment