ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அதிமுக ஆட்சியில் முறையற்ற நிர்வாகம், சீர்கேட்டால் 34 ஆயிரம் கோடி இழப்பு: 3 ஆண்டுகளுக்கு பின் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக் கையில் அதிர்ச்சி தகவல்

* வரி ஏய்ப்பு குற்றத்திற்காக சிறையில் உள்ள மென்பொருள் வைரஸ் எதிர்ப்பு செயலியை உருவாக்கும் நிறுவனத்தின் தலைவர் மெக்காபே, சிறையில் இறந்தார்.

* அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள், திமுக என்பது  யாராலும் அடக்க முடியாத யானை என்று எதிர்க்கட்சி தலைவருக்கு முதல்வர்  மு..ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பொறியியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடங்கள் படிக்காத மாணவர்களைச் சேர்க்கலாம் என்ற அகில இந்திய தொழிற்கல்விக்கழகத்தின் முடிவுக்கு நிதி ஆயோக் உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

* லட்சத்தீவில் அதன் நிர்வாக அதிகாரி பிறப்பித்துள்ள சர்ச்சைக்குரிய சட்டங்களை திரும்ப பெற உத்தரவிடும்படி கோரி, குடியரசு தலைவருக்கு விஞ்ஞானிகள் கடிதம் எழுதி உள்ளனர். 

டெக்கான் ஹெரால்டு:

* நீதிக் கட்சி ஆட்சியின் தொடர்ச்சி தான் இந்த ஆட்சி என்று அறிஞர் அண்ணா சொன்னார். அதேவழியில், எங்களது ஆட்சியும் நீதிக் கட்சியின் தொடர்ச்சிதான் என்பதைப் பெருமையோடு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என தமிழ் நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் சட்டமன்றத்தில் கூறினார்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment