தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் "பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுகளின்" பின்னூட்டக் கருத்துக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 25, 2021

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் "பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுகளின்" பின்னூட்டக் கருத்துக்கள்

மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரி யாரியல் பயிற்சி மாணவர்களின் பின்னூட்டக் கருத்துகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.

அவ்விவரம் வருமாறு:

இந்த வகுப்பு எனக்கு மிகவும் பயனுள்ள தாக அமைந்திருக்கின்றது. இதில் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலா றையும் தமிழ்நாட்டின் சமுதாய வரலாறையும் என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. இது எனக்கு என் சிந்தனைகளை மேம்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஆர்.கே.ஆசிதாசாய்,

10ஆம் வகுப்பு, சென்னை

இன்றைய வகுப்பில் அய்யா பெரியார் அவர்களின் நகைச்சுவையுடன் கூடிய கருத்துக்களை உள்ளடக்கிய  வகுப்பு மிகவும் சிறப்பாகவும் பகுத்தறிவை தூண்டுவதாகவும் அமையப் பெற்றது. இதில் முக்கியமாக இளம் தளிர் ஆகிய நாம் அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தலையாய கருத்தாக நான் எடுத்துக் கொள்கிறேன் .... காரணம் அதன் பின்புலத்தை அறியாமல் சீமான் அவரின் பேச்சில் அடிமையாய் போனவர் களில் நானும் ஒருவன்...இனிமேலாவது சிந்தித்து  அதனை ஆராய்ந்து செயல்படு வேன் என உறுதியளிக்கிறேன் தோழரே....

  .சக்திஞானவேல், பி.லிட், (தமிழ்),

கொல்லாங்கரை, தஞ்சாவூர்.

இன்றைய பெரியாரியல் வகுப்பில் 'திரா விடம் வெல்லும்' என்ற வகுப்பில் மிகதெளி வாக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உரையாற்றி திராவிடம் ஆரியம் பற்றிய இரண்டாயிர ஆண்டுகள் போராட்டத்தைப் பற்றிய வரலாற்றை உணர்த்தி ஆரியத்தால் வீழ்ந்தோம்  திராவி டத்தால் எழுந்தோம் என்ற உண்மைநிலையை உணர்த்தி தற்போது வரை திராவிடத்தால் வாழ்கிறோம் என்று புரிதலை வழங்கிய பேராசிரியர் காளிமுத்து அய்யாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வே.தமிழரசு, திண்டுக்கல்.

'திராவிடம் வெல்லும்' என்ற தலைப்பில் நாம் போராளியாக இருந்து...  அரசு வேலை யில் நம்மவர்க்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எவ்வாறு இருந்தது, மாலையில் சங்கம் வைத்து கல்வி தந்ததுMadras United League ஆண்டு விழாவில் 'திராவிடர்' சங்கம் பெயர் மாற்றம் பெற்றது முதல் திராவிடர் கழகம் வரை திராவிடம் மூலமாக இருந்தை பல்வேறு சூழலில் வரலாற்றுடன் எடுத்து ரைத்தது சிறப்பு... பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பில் அனைத்து சமூக பிரச்சினை களுக்கும் விடிவு,  திருவள்ளூர் தெரு பெயர் மாற்றம், வகுப்புரிமை தீர்மானம் மறுப்பால் காங்கிரசில் இருந்து  வெளியேறுதல், கள்ளுக் கடை மறியல். சூத்திரரின் ஆட்சி, கல்வி கொடுக்க கூடாது, பெண்ணுக்கு உயிர் இல்லை என்று பார்ப்பனர் கூறியதையும்,  பெண்களுக்கான வாக்குரிமை நீதி கட்சி மூலம் பெற்றதும், வைக்கம் போராட்டம் - முதல் மனித உரிமை மீட்பு போராட்டம்,  காங்கிரஸ் ஒழிய வேண்டும் என்று 2.5.1925 இயக்கம்  துவங்கி அன்றைய குடியரசு நாளிதழில் தமிழ் நாடு என்று எழுதியது, பெயருக்கு பின்னால் வரும் ஜாதி பெயர் நீக்கம் செய்து,  என்று இன்னும் பல்வேறு முக்கியமான பெரியாரின் திராவிடம் பற்றி குறுகிய காலத்தில் புதிய தகவல்களை அய்யா காளிமுத்து அவர்கள் வழங்கியமைக்கு நன்றி

திவ்யா

திண்டுக்கல் மண்டலம்

எனது மூளையில் விலங்கிட்டு இருந்த மூடநம்பிக்கைகள் தெறித்து உடையும் படி  இன்றைய வகுப்பு ஆனது சிறப்பாக அமைந் திருந்தது மூடநம்பிக்கை குறித்த ஒரு தெளி வான பார்வை கிடைத்ததால் சுயமரியாதை யோடும், பகுத்தறிவோடு நான் தலை நிமிர்ந்து நடப்பதற்கு பேருதவியாக இருந்தது இந்த வகுப்பு.  மிக்க நன்றி.

ஜெ.எம். ராகுல்

பட்டயம் ஹோட்டல்

மேனேஜ்மெண்ட், மதுரை .

என் பெயர் சீனிவாசன். நான் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பொருளியல் படித்து வருகிறேன்... நான் தர்மபுரி பெரியாரியல் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன்.

நான் இதற்கு முன்னர் பெரியாரைப் பற்றி படித்திருந்தாலும் அதை கடைப்பிடித்து இருந்தாலும் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன அதை எங்கே கேட்பது எப்படி கேட்பது என்று தெரியாமல் இருந்தது. அதற்கான ஒரு பகுதியாக இந்த பயிற்சி வகுப்பு எனக்கு அமைந்தது இதன் மூலம் எனக்குள் இருந்த பல கேள்விகளைக் கேட்டு நான் தெளிவடைந்து தற்போது கடவுள் இல்லை என்பதை முழுமையாக உணர்ந்து கடவுளை பின்பற்றும் நபருக்கு   பகுத்தறிவால் பதிலடி கொடுக்கும் அளவிற்கு என்னை தர்மபுரி மண்டல பெரியார் பயிற்சி வகுப்பு வளர்த்துள்ளது... நன்றி அய்யா.

தந்தை பெரியார் வாழ்க

அன்னை மணியம்மையார் வாழ்க

தமிழர் தலைவர் வீரமணி வாழ்க

சீனிவாசன், தர்மபுரி

வணக்கம். பெரியாரியல் வகுப்பு ஒவ்வொன்றும் புதுமையான கருத்து எனக்கு பெரியாரைபற்றி பல கருத்துகளை புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு இதை எங்களுக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி,

-சகஸ்திரன்-ஒசூர்

வணக்கம்,  பெரியாரியல் பயிற்சி வகுப் பில் நடந்த ஒவ்வொரு வகுப்பிலும் அனை வரும் மிக முக்கியமாக பயன்பெற்று இருப் பார்கள். நான் மிகுந்த பயனடைந்துள்ளேன். பகுத்தறிவான இவ்வகுப்பில் மாணவர் களாகிய எங்களுக்கு புரிந்துகொள்ளும் வகையில் மிக சிறப்பாக பாடம் நடத்திய அய்யா, அம்மா,தோழர் மற்றும் இவ்வகுப்பு சிறப்பாக நடைபெற பாடுபட்ட அனை வருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். மிக்க நன்றி அனைவருக்கும்.

இவ்வகுப்பால் நான் பயன்பெற்றுள்ளேன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.மன தாலும் பகுத்தறிவாலும் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றி!

பவுன்ராஜ்.மா, திருவண்ணாமலை

அயோத்தியாபட்டணம்.

சமூகப் புரட்சிப் பயணத்தில் அண்ணல் அம்பேத்கரும் அய்யா பெரியாரைப் பற்றியும் எளிய நடையில் எடுத்து உரைத்த வழக் குரைஞர் மதிவதனி அக்கா அவர்களுக்கு மிக்க நன்றி.

பெரியாரின் பகுத்தறிவு மிக்க கருத்துக் களையும் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் புரட்சிகரமான செயல்களைப் பற்றி என்னைப் போன்ற இளங்குருத்துகளிடம் போய் சேர வேண்டும்.

இன்றைய வகுப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.எளிதாக புரியும் வகையில் அருமையாக வைக்கும்-பெரியாரும் என்ற தலைப்பில் சிறப்பாக எடுத்துரைத்த டாக்டர் . திருநாவுக்கரசர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.

சு..யாழினி

ஒன்பதாம் வகுப்பு

சமயபுரம்-திருச்சி

  பெரியாரியல் பயிற்சி வகுப்பின் மூலமாக நான் பெரியாரை பற்றி நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன். அதுவும் நேற்றைய வகுப்பின் மூலம் தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனை பற்றி ஒரு மணி நேரத்தில் நடந்த வகுப்பின் மூலம் ஓரளாவு கருத்துகளை நான் பெற்றுக்கொண்டேன். இன்னும் தந்தை பெரியார் பெண்ணுரிமைக்காக எந்த அளவு போராடினார் என்பதை பற்றி அறிய நான் ஆர்வமாக உள்ளேன்.

இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்பின் மூலமாக நான் எனது அறிவை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள அடிப்படையாக அமை கிறது. இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்பின் மூலமாக நான் ஒரு பெரிய பேச்சாளராக வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.

இப்படிக்கு

சு. சத்தியப் பிரியா

 

No comments:

Post a Comment