சென்னை,ஜூன்27- சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட சிவசங்கர் பாபா குணமடைந்ததையடு த்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது பள்ளியில் படிக் கும் மாணவிகளை பாலி யல் தொந்தரவு செய்த தாக எழுந்த புகாரில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிபிசிஅய்டி காவல் துறை யினர், டில்லி அருகே ஜூன் 16ஆம் தேதி கைது செய்தனர்.அதன்பின் சிறையில் அடைக்கப் பட்ட அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட தால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். இந்நிலை யில், நோயிலிருந்து குண மடைந்த சிவசங்கர் பாபாவை மீண்டும் சிறையில் அடைக்க காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே, சிவசங்கர் பாபாவை 10 நாள்கள் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் சிபிசி அய்டி காவல்துறையினர் மனு அளித்துள்ளனர்.சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அதனடிப் படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப் படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத் தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதனி டையே டேராடூனில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவ சங்கர் பாபாவை விசா ரிக்க சென்னை சிபிசிஅய்டி தனிப் படையினர் விரைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந் நிலையில், மருத்துவமனை யில் இருந்து தப்பி டில்லி வந்து காசியாபாத் பகு தியில் பதுங்கியிருந்த சிவ சங்கர் பாபாவை கைது செய்த காவல்துறையினர் ஜூன் 16ஆம் தேதி இரவு சென்னை அழைத்து வந் தனர். இதையடுத்து செங் கல்பட்டு மகளிர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட சிவசங்கர் பாபா வுக்கு 15 நாள்கள் நீதி மன்றக் காவல் அளிக்கப் பட்டது.
No comments:
Post a Comment