சென்னை,ஜூன்20- பள்ளியில் மாண வியரிடம் பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் சிவசங்கர் பாபா தமிழ்நாட்டிலிருந்து தப்பி யோடி தலைமறைவானதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்து வரும் சிபிசிஅய்டி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடு தல் வேட்டை நடத்தினர். டேராடூ னிலிருந்து வெளிநாடு செல்ல மாறு வேடத்தில் சென்ற சிவசங்கர்பா பாவை தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படையினர் டில்லியில் கைது செய்தனர். சென்னைக்கு கொண்டு வரப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறைக்காவலில் அடைக்கப்பட்டார்.
ஆசிரமத்தில் சோதனை
சிவசங்கர் பாபா தங்கியிருந்த அறை, சுசில்ஹரி பள்ளி, ராமராஜ்ய வளாகம், சம்ரட்சணா ஆசிரமம் ஆகிய இடங்களை சிபிசிஅய்டி காவல்துறையினர் சோதனையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். சிபிசி அய்டி காவல்துறை கண்காணிப் பாளர் விஜயகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் கேளம் பாக்கத்தில் உள்ள ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவ ணங்களும், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க்குகள், சிசிடிவி கேமராவின் காட்சிகளும் கைப்பற்றப்பட்டன. அப்பள்ளியின் மாணவர்களின் பெற்றோர் ஆவேசத்துடன் சி.பி.சி. அய்.டி காவல்துறை கண்காணிப் பாளர் விஜயகுமார் மற்றும் காவல் துறையினரிடம் கூறுகையில், நாங் கள் "ஒவ்வொரு குழந்தைக்கும் 50 ஆயிரத்திற்கும் மேல் ஆண்டுக் கட் டணம் செலுத்தி பள்ளியில் சேர்த் துள்ளோம். ஆனால், பெற்றோர் களாகிய எங்களை ஒரு பொருட் டாகவே மதிக்காமல் மெயின் கேட் டுக்கு வெளியே நிறுத்தி விடுகின்ற னர். உட்கார சாதாரண நாற்கா லியோ, குடிக்கத் தண்ணீரோ கூட வழங்கப்படுவதில்லை. இதனால், நாங்கள் ஏதோ தப்பு செய்து விட்டு வந்தவர்கள் போல் நடத்தப்படுகி றோம். பள்ளிக் குழந்தைகளை பாலியல் தொல்லை செய்த சாமியா ருக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி கொடுங்கள். அப்போதுதான் அது மற்ற சாமியார்களுக்கு ஒரு பாட மாக இருக்கும்" என்றனர்.
சிபிசிஅய்டி காவல்துறை கண் காணிப்பாளர் விஜயகுமார் பள்ளி நிர்வாகிகளை அழைத்து பெற் றோர்களுக்குத் தேவையான வசதி களை செய்து தருமாறும், அவர்கள் கேட்கும் சான்றிதழ்களை விரைந்து வழங்குமாறும் அறிவுறுத்தினார்.
சாமியாரின் சிஷ்யை கைது
பள்ளியில் 2012ஆம் ஆண்டு படித்த மாணவி ஒருவர் சிபிசிஅய்டி காவல்துறையினரிடம் ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் "சுசில் ஹரி பன்னாட்டு உறைவிடப்பள்ளி யில் படித்த முன்னாள் மாணவி சுஷ்மிதா (வயது 30). கல்லூரியில் சேர்ந்த பின்னரும் பள்ளிக்கு அடிக் கடி வந்து செல்வார். மாணவிகளை சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார். இதனால் எங்களுக்கு நன்கு அறிமுகமானவர். சுஷ்மிதா அடிக்கடி மாணவிகளை பாபா அறைக்கு அழைத்துச் செல் வதை நான் பார்த்துள்ளேன். ஒரு நாள் என்னையும் பாபாவின் ரக சிய அறைக்கு அழைத்துச் சென் றார். நான் பாபா அறைக்குள் சென் றதும், சுஷ்மிதா வெளியில் சென்று விட்டார். பாபாதான் என்னை அருகில் அழைத்தார். பின்னர் வாயை கழுவி விட்டு வரும்படி கூறினார். நான் வாயை கழுவி விட்டு வந்தபோது, திடீரென கட்டிப் பிடித்து வாயில் முத்தம் கொடுத்து விட்டார். நான் பயந்து அலறினேன். ஆனால் என்னை இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண் டார். இதனால் அவரது பிடியில் இருந்து தப்பிக்க முடியவில்லை. பின்னர், முத்தம் கொடுத்தபடி கண்ட இடங்களில் கை வைத்தார். நீண்ட நேரத்துக்குப் பிறகுதான், வெளியில் சொல்லக்கூடாது. சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி அனுப்பினார். சிவ சங்கர்பாபாவின் அறைக்கு வெளியே சுஷ்மிதா நின்று கொண் டிருந்தார். அவரும் அறைக்குள் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது. சொன்னால் உனக்கு மட்டும் இல்லை. உன் குடும்பத்துக்கும் ஆபத்து என்று மிரட்டி அனுப்பினார். அதன் பின்னர் பள்ளி படிப்பை முடித்த பிறகு நான் காவல்துறையில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்க வில்லை. இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரில் சுஷ்மிதாவை, சிபிசிஅய்டி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் செங்கல்பட்டு குழந்தைகளுக்கு எதி ரான குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப் பட்டார்.
No comments:
Post a Comment