கையடக்க கணினிக் கருவியை உருவாக்கிய 14 வயது மாணவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

கையடக்க கணினிக் கருவியை உருவாக்கிய 14 வயது மாணவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டு

புதுடில்லி, ஜூலை 29 கையடக்க கணினி மய்யச் செயலாக்கக் கருவியை உருவாக்கிய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி எஸ்.எஸ்.மாதவை தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின்  நேற்று (28.7.2021) நேரில் அழைத்துப் பாராட்டினார்.

இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு நேற்று (28.7.2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

‘’தமிழ்நாடு முதல்வர் மு..ஸ்டாலினை நேற்று (28.7.2021) தலைமைச் செயலகத்தில், திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.மாதவ் சந்தித்து, தான் புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மய்யச் செயலாக்கக் கருவியைக் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமம், கலைஞர் நகரில் வசித்து வரும் சேதுராசன் என்பவரின் மகன் எஸ்.எஸ்.மாதவ், ஒன்பதாம் வகுப்புப் பயின்று வருகிறார். இவர் கணினியில் மிகுந்த ஆர்வம் கொண்டு, கணினி மொழிகளான Java, Python, C, C++, Kotlin ஆகியவற்றைப் படித்துள்ளார்.

இவர் கரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கையடக்க கணினி மய்ய செயலாக்கக் கருவியை   கண்டுபிடித்து உள்ளதாகவும், இதற்காக இரண்டு ஆண்டுகளாகக் கடுமையாக முயற்சித்து இம்முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்பதையும் கேள்விப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் எஸ்.எஸ்.மாதவை நேரில் அழைத்துப் பாராட் டினார். இக்கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக      இணையதளம்  மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார் என்ற தகவலைக் கேட் டறிந்த முதலமைச்சர் அம்மாணவனை வாழ்த்தினார்.

எஸ்.எஸ்.மாதவின் கண்டுபிடிப்பினைப் பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர், கணினி தொடர்பான அவரது உயர்படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். இந்நிகழ்வின்போது,

எஸ்.எஸ். மாதவின் பெற்றோர்கள் உடனிருந்தனர்’’. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த உயர்கல்வித்துறை தீவிர ஆலோசனை

 புதுடில்லி, ஜூலை 29 பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த உயர்கல்வித்துறை தீவிர ஆலோ சனை நடத்தி வருகிறது.

உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசு ஈடுபட்டு இருக்கிறது. அந்த வகையில் பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்த உயர்கல்வித் துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இதன் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து பல் கலைக்கழகங்களும் தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவன (என்.அய்.ஆர்.எப்.) தரவரிசையில் ஒருசேர இடம்பெறுவதற்கு என்ன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும், பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்தி, பல்வேறு விதமான தரவரிசைகளில் அவற்றை இடம்பெறச் செய்வது எப்படி என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவில் ஒரு குழு அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படு கிறது. அதில் உயர்கல்வித் துறை செயலாளர், உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவர், உறுப்பினர் செயலாளர், துணைவேந்தர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று பேசப்படுகிறது. இந்தக் குழு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு களை மேற்கொண்டு, உயர்கல்வியின் தரத்தை மேம் படுத்துவதற்கு செய்ய வேண்டிய சில பரிந்துரைகளை அரசிடம் தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை சில நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்ப தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்திய வழக்கு

திமுக தலைவர் மு..ஸ்டாலின் விடுவிப்பு

சென்னை, ஜூலை 29 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில், திமுக தலைவர் மு..ஸ்டாலின் உள்ளிட்ட 7 தலைவர்களை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்தியாக தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு..ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்களை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிய போராட்டத் தில் வழக்குகளை திரும்பப் பெறுவதாக காவல்துறை கூறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment