சென்னை, ஜூலை 30 தமிழ் நாட்டில் தற்போது 21,207 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில சுகா தாரத்துறை சார்பில் நேற்று (29.7.2021) வெளியிடப்பட் டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் நேற்று 1,859 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இதுவரை கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத் தில் மேலும் 28 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,023 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,145 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் கரோ னாவில் இருந்து குணம டைந்தவர்களின் எண் ணிக்கை 25,00,434 ஆக அதிகரித்துள்ளது. தமிழ் நாட்டில் தற்போது 21,207 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவ தாக தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment