புதுடில்லி, ஜூலை 29- ஊதியம், ஓய்வூதியம் போன்றவற்றை வார இறுதி நாள்களிலும் பெற்றுக்கொள்ளும் வசதி ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகி றது. இதுபோலவே இஎம் அய் போன்றவையும் வார இறுதி நாள்களில் செலுத் தும் வசதி வழங்கப்படுகி றது.
அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்க ளுக்கு ஊதியம் அவர்க ளது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. மொத்தமாக ஊழியர்க ளுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கான மொத்த தொகை என்ஏசிஎச் எனப்படும் தேசிய பணம் செலுத்தும் கார்ப்பரே ஷன் வழியாகவே வழங் கப்படுகிறது.
வார இறுதி நாள்களில் விடுமுறை என்பதால் அடுத்த வேலை நாட்க ளில் மட்டுமே கிளிய ரன்ஸ் வசதி தற்போது உள்ளது. இது அனைத்த நாள்களிலும் செயல்படும் என ஒன்றிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் ஏற்கெனவே அறிவித் தார். இந்த வசதி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அம லுக்கு வரும் எனவும் அறிவித்தார்.
அதன்படி, ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.அய் கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்த னைகளை மேற்கொள்ள இனிமேல் வார வேலை நாள்களில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ரிசர்வ் வங்கியின் இந்த மாற்றங்கள் ஆகஸ்டு 1, 2021 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இனி எல்லா நாள்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சம்பளம் அல்லது ஓய்வூதிய சேவை கள் இனி வாரத்தின் அனைத்து நாள்களிலும் கிடைக்கும்.
ஊதியம் மட்டும் அல் லாமல் வங்கிக்கு செலுத்த வேண்டிய இஎம்அய் போன்றவற்றையும் குறிப் பிட்ட அந்த நாள்களில், வார இறுதி நாள்களாக இருந்தாலும் செலுத்த முடியும். பங்குகளுக்கான டிவிடெண்ட்டையும் இனி முன்னதாக பெறலாம்.
No comments:
Post a Comment