தன்னார்வ அமைப்பு அறிக்கை
புதுடில்லி, ஜூலை 29 கரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை குழந் தைகள் கடத்தப்பட்டு குழந்தை தொழிலாளர்களாக்கப் பட்ட நிலையில், ஊரடங்கு முடி வுக்கு வரும் நிலையில் மேலும் குழந்தைகள் கடத்தல் அதிகரிக் கும் என எச்சரிக்கை வெளியாகி யுள்ளது.
கரோனா ஊரடங்கு காலத் தில், நாடுமுழுவதும் சுமார் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தப் பட்டனர். குழந்தைத்தொழில £ளர்களாக்கப் பட்ட நிலையில், தற்போது அக் குழந்தைகள் மீட் கப்பட்டனர் என ‘பச்சன் பச்சோ அந்தோலன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, குழந் தைகள் உரிமைகளுக்காக ‘பச்சன் பச்சோஅந்தோலன்’ என்ற தன் னார்வ அமைப்பை நடத்தி வரு கிறார். இந்த அமைப்பு தான் குழந்தைகள் கடத்தல் தொடர் பானபுள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், “ஏப்ரல் 2020 முதல் ஜூன்2021 வரை நாட்டில் கடத்தப்பட்ட 9 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட் டுள்ளனர். அவர்கள் அனைவரும் குழந்தைதொழிலாளர் களாக பயன்படுத்தப்பட்டிருந்தனர். நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 3 ஆயிரத்து 183 கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிர தேசத்திற்கு அடுத்தபடியாக தெலங் கானா மாநிலத்தில் 2 ஆயிரத்து 805 குழந்தைகளும், ஆந்திராவில் 593 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.
இதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் 430 குழந்தைகள், குஜ ராத்தில் 333 குழந்தைகள் மீட்கப் பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள் ளது. 2020ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கிற்கு பிறகு நாடு மீண்டும் இயல்பு நிலைக்குத்திரும்பிய பிறகு, நாட்டில் குழந்தைகள் கடத்தல் அதிகரிக்கும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்களும், ஒன்றிய உள்துறை அமைச்சகமும் எச்சரித்துள்ளன.
ஊரடங்கினால் மூடப்பட்டு கடும் இழப்பில் இயங்கிவந்த ஆலைகள் மீண்டும் லாபத்தில் இயங்குவதற்காக குறைந்த ஊதியத் திற்கு குழந்தைகளை தொழிலாளர் களாக பயன்படுத்தும் அபாயம் இருந்த காரணத்தால் ஒன்றிய உள் துறை அமைச்சகமும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் இந்த எச்சரிக் கையை விடுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே, 2020 ஆகஸ்டு முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் குழந்தைகள் கடத்தல் அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் பெற்றோர்கள் அல்லது பாது காவலர்கள் இல் லாமல் குழந்தைகள் பயணிப்பது அதிகரித்துள்ளது. பெரும்பாலும் பேருந்துப் போக்கு வரத்து மூல மாகவே குழந்தைகள் கடத்தல் நடந்துள்ளது. அதே 2020 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 400 குழந் தைகள் மீட்கப்பட்டு, 100 கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டனர். பள்ளிகள் செயல்படாத காரணத் தாலும், பொருளாதார சூழல் காரணமாகவும் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடைநிற் கின்றனர். இவ்வாறு இடை நிற்கும் குழந்தைகள் தொழி லா ளர்களாக மாறுகின்றனர்.
குழந் தைத் தொழிலாளர்ளுக்கு எதி ரான முகாம் ஆய்வின்படி, மராட்டியம், தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் குழந்தைத் தொழி லாளர்கள் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.
ஒட்டுமொத்த மாக கரோனா ஊரடங்கு காலத்தில் 9 ஆயிரத் திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப் பட்டு மீட்கப்பட்டுள்ளனர் என்று ‘பச்சன் பச்சோ அந்தோலன்’ தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment