பொறியியல் வகுப்புகள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

பொறியியல் வகுப்புகள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 29  கரோனா தொற்று காரணமாகத் தமிழ்நாட்டில் கடந்த 16 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல் லூரிகள் திறக்கப்படாமலேயே உள்ளன. தொற்று அச்சத்தால் மாற்றுக் கற்பித்தல் முறையாக பள்ளிகள் மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் இணையவழி மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தொற்று வேகம் குறைந்து வந்தாலும் கரோனா 3ஆவது அலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளுக்கு இணையவழியில் கற்பித்தலைத் தொடங்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.

முதலாம் ஆண்டு நீங்கலாக 3, 5 மற்றும் 7ஆவது செமஸ்டர் பொறியியல் மாணவர்களுக்கும் முதுகலை 3, 5ஆவது செமஸ்டர் மாணவர்களுக்கும் இந்தக் கால அட்டவணை

பொருந்தும்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி இணைய வகுப்புகள் தொடங்கி, நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் செமஸ்டர் செய்முறைத் தேர்வுகள் டிசம்பர் 2ஆம் தேதியும் எழுத்துத் தேர்வுகள் டிச.ம்பர் 13ஆம் தேதியும் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, இணைய முறையில் வகுப்புகள் நடத்தப்படும். அதேபோல அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் 2022ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment