கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியில் பதில் அளிப்பதா? ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியில் பதில் அளிப்பதா? ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

 சென்னை, ஜூலை 29- சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் எம்.ஞானசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் புதுச்சேரியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டு விண்ணப் பித்தேன்.

அந்த மனுவை திருப்பி அனுப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சகம், இந்தியில் பதில் அளித்திருந்தது. எனக்கு இந்தி தெரியாது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும். எனவே இந்தியில் வழங்கிய உத்த ரவை ரத்து செய்ய வேண்டும். எனக்குத் தெரிந்த மொழி களில் மட்டுமே பதில் அளிக்க உத்தரவிட வேண்டும்என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்திய நாதன் முன்பு நேற்று (28.7.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு ஆவணங்களை பார்த்த நீதிபதி எஸ்.வைத்திய நாதன் மனுதாரரை பார்த்து, உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் இந்தி தெரியாது என்று விளக்கம் அளித்தார். பின்னர், ஒன்றிய அரசு வருகிற 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று உத்தர விட்டார்.

தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில்

நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

சென்னை, ஜூலை 29 தென்மேற்குப் பருவமழையால் தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 3.07 மீட்டர் உயர்ந்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நீர்வள ஆதாரத் துறை, மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கிணறுகள் மூலம் மாதந்தோறும் நிலத்தடி நீர் மட்டத்தைக் கணக்கிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் இந்த ஆண்டு ஜூலைமாதத்தை ஒப்பிட்டால் 36 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

வேலூரில் 3.07 மீட்டர் உயர்வு

தென்மேற்குப் பருவமழை காரணமாக அதிகபட்சமாக வேலூரில்நிலத்தடி நீர் மட்டம் 3.07 மீட்டர் உயர்ந்து இந்த ஆண்டு 8.21 மீட்டராக உள்ளது.  மிகக் குறைவாக ஈரோடு மாவட்டத்தில் 0.09 மீட்டர்மட்டுமே நீர்மட்டம் உயர்ந் துள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் 2 மீட்டருக்கு மேல் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

திருவள்ளூர், தருமபுரி, கடலூர்,விழுப்புரம், கரூர், நாமக்கல், தேனி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் 1 மீட்டருக்கும் அதிகமாகநிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஈரோடு, கோவை, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் 0.09 மீட்டர் முதல் 0.73 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறை தெரிவித் துள்ளது.

கரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான மருந்து

சென்னை, ஜூலை 29  தமிழ் நாட்டின் மதுரையை சேர்ந்த இளம் பெண் அறிவியலாளர் கவுதமி பால சுப்ரமணியன் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நோயெதிர்ப்பு (மருத்துவ பயோடெக்னாலஜி) முதுகலைப் பட்டப்படிப்பு பயின்றவர், மேலும் லண்டனில் உள்ள காஸ்மிக் ஃப்யூஷன் லிமிடெட் என்ற பயோ டெக்னாலஜி நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியவராவார்.

இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடல் தாக்கும் வீக்கமுள்ள நோய்கள் குறித்த சில ஆராய்ச்சி முடிவுகளை கண்டறிந்தார். அந்த ஆராய்ச்சி முடிவுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக ஆன்காலஜி துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதே ஆராய்ச்சியின் முடிவுகள் அடிப்படையில் கரோனா நோயின் தீவிர தாக்குதல்களால் உருவாகும் அதீத வீக்கம், மூச்சுத்திணறல் போன்றவைகளால் நிகழும் எண்ணற்ற மரணங்களை தடுக்கும் இவரது ஆராய்ச்சி களின் முடிவில் கண்டு பிடிக்கப்பட்ட மருந்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  விரும்புகிறார்.

இது தடுப்பு மருந்து அல்ல மாறாக,  இந்த மருந்தின் மூலம் கரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் அதி தீவிரதாக்கமான வீக்கம், காய்ச்சல், மூச்சுதிணறலை உருவாக்கும் டிஎன்எப் ஆல்ஃபாவின்  ஒரு பகுதி  தடுத்து நிறுத்தப்படுவதால் மேற்கூறிய  வீக்கம், காய்ச்சல் ,மூச்சு திணறல் குறைந்து உயிர் இழப்புகளை தடுத்து நிறுத்த முடியும். இந்த மருந்தின் பயன்பாடு அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment