உலக அளவில் கரோனா உயிரிழப்பு 21 சதவீதம் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

உலக அளவில் கரோனா உயிரிழப்பு 21 சதவீதம் அதிகரிப்பு

வாசிங்டன், ஜூலை 30 உலக அளவில் கடந்த வாரம் கரோனா மரணங்கள் 21 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு  தெரிவித்தது.

அந்த அமைப்பு கூறியிருப்பதாவது:-

கடந்த வாரம் 69 ஆயிரம் கரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளன. கரோனா புதிய பாதிப்புகள், 8 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 19 கோடியே 56 லட்சத்தை தாண்டி விட்டது.

இதேரீதியில் சென்றால், இன்னும் 2 வாரங்களில் 20 கோடியை மிஞ்சிவிடும். அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இவ்வாறு கூறியுள்ளது.

No comments:

Post a Comment