அஜர்பைஜான்-அர்மீனியா ராணுவங்களுக்கு இடையே மீண்டும் மோதல்; 3 வீரர்கள் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

அஜர்பைஜான்-அர்மீனியா ராணுவங்களுக்கு இடையே மீண்டும் மோதல்; 3 வீரர்கள் பலி

அர்மீனியா, ஜூலை 30 முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர் பைஜான் மற்றும் அர்மீனியாவின் எல்லையில் உள்ள நாகோர்னோ - காராபாக் எனும் மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் நிலவுகிறது.

இந்த எல்லைப் பிரச்சினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆயுத மோதலாக உருவெடுத்தது. இருதரப்பு ராணுவத்துக்கும் இடையில் 6 வாரங் கள் இடைவிடாமல் தொடர்ந்த சண்டையில் 6 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் கொன்று குவிக்கப்பட் டனர். இது பன்னாட்டு அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து ரஷ்யாவின் சமாதான முயற்சியின் பலனாக நவம்பர் மாதம் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இந்தநிலையில்  அஜர்பைஜான்- - அர்மீனியா எல் லையில் இரு நாடுகளின் ராணுவத் துக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் அர்மீனியா ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். அதே போல் அஜர்பைஜான் தரப்பில் 2 வீரர்கள் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோத லுக்கு இருதரப்பும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டியுள்ளன. இதற்கிடை யில் இந்த மோதலை தொடர்ந்து ரஷ்யா இரு தரப்பையும் தொடர்பு கொண்டு சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தியது.

அதன்படி ரஷ்யா கேட்டுக்கொண் டதற்கு இணங்க அஜர்பைஜான் ராணுவம் அர்மீனியாவுடன் சண்டை நிறுத்தத்தை அறிவித்தது.

No comments:

Post a Comment