தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 232 கைதிகள் உயிரிழப்பு மக்களவையில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 232 கைதிகள் உயிரிழப்பு மக்களவையில் தகவல்

புதுடில்லி ஜூலை 29 நாட்டில் மூன்று ஆண்டுகளில் 5,569 கைதிகள் நீதிமன்றம்  மற்றும் காவல் துறையின் காவலில் இருந்தபோது பலியாகியுள்ளதாக மக்களவையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய்  தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஜூலை

19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், காவலில் இருக்கும் போது பலியான கைதிகள் குறித்த விவரங்களைக் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு  முதல் 2021ஆம் ஆண்டு வரை காவலில் இருந்த 5,569 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அதில், நீதிமன்றக் காவலில் 5,221 பேரும், காவல்துறையின் காவலில் 348 பேரும் உயிரிழந்துள்ளனர். 2018-2019 வரை 1,933 கைதிகள், 2019-2020 வரை 1,696 கைதிகள் மற்றும் 2020- ஜூலை 27, 2021 வரை 1,940 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1,318 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அதில், காவல்துறை காவலில் 23 பேர் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மூன்று ஆண்டுகளில் 232 கைதிகள் பலியாகியுள்ளனர். அதில், காவல்துறை காவலில் 25 பேர் பலியாகியுள்ளனர்.

 

கரோனா கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடில்லி, ஜூலை 29  வரும் பண்டிகை காலங்களை கவனத்தில் கொண்டு, கூட்டம் கூடுகிற இடங்களில் கரோனா கால கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஒவ்வொரு மாநிலங்களும் சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன. இன்னமும் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கரோனா கட்டுப்பாடுகளை ஆகஸ்டு 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருக்கிற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கரோனா வைரஸ் பெருந்தொற்றை நிர்வகிப்பதற்கு பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், கரோனா கால பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகிய 5 அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

வரும் விழாக் காலங்களை கவனத்தில் கொண்டு, கூட்டம் கூடுகிற இடங்களில் கரோனா கால கட்டுப் பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment