"ட்ரோன்" மூலம் சரக்குப் போக்குவரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

"ட்ரோன்" மூலம் சரக்குப் போக்குவரத்து

உலகின் மிகப் பெரிய இணைய அங்காடியான அமேசான், சரக்கு போக்கு வரத்திலும் முன்னோடியாக உள்ளது. தனது வாடிக்கையாளர்களின் முகவரிக்கு பொருட்களைக் கொண்டு போய் தருவதற்கு, தனது வாகனங்களையே எதிர்காலத்தில் பயன்படுத்த நினைக்கிறது அமேசான்.

இதற்கென தற்போது மின்சார டெலிவரி வேன்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. விரைவில், அந்த வேன்களிலிருந்து, வீட்டு வாசலில் பொருட்களை கொண்டு போய் போடுவதற்கு 'ட்ரோன்'களை பயன்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது.

கதவருகே விநியோகம் செய்ய, வேனில் தனியாக ஒரு பணியாளர் அமர்ந்து செல்ல வேண்டியதில்லை. வேனின் கூரை மேல் இருக்கும் ட்ரோன், மதில் சுவர், கேட், படிகள் என்று எவற்றையும் பறந்து கடந்து சென்று சரக்கை வைத்துவிட்டு வேனுக்குத் திரும்ப முடியும். அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கும் ட்ரோன்களே பொருத்தமானவை என அமேசான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பிரம்மாண்டமான சரக்கு கிடங்கில், சக்கரத்துடன் கூடிய ரோபோக்கள் பொருட்களை எடுத்து தானோட்டி மின் வாகனங்களில் போட்டு அனுப்ப, அவை முகவரிக்கு அருகே வந்ததும், வேனிலிருக்கும் ட்ரோன்கள் பொருளை எடுத்துப் பறந்து போய், வாசலருகே போட்டுவிட்டுத் திரும்பும்.இதுதான் அமேசான் உருவாக்கவிருக்கும் எதிர்காலம்.

No comments:

Post a Comment