புதுடில்லி, ஜூலை 29 தங்களின் அடுத்த குறி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் நடைபெற வுள்ள சட்டப்பேரவைத் தேர் தல்கள்தான் என்றும், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து இங்கும் பாஜக-வைத் தோற் கடிக்காமல் விட மாட்டோம் என்றும் பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறியிருப்ப தாவது:
மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வுக்கு எதிராக தீவிரப் பிரச் சாரம் செய்தோம். அதனால் மேற்குவங்கத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. இதேபோல அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் உத்தரப்பிர தேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மாநிலங்களிலும் இதே வியூகத்தை பின்பற்றுவோம். இந்த மாநிலங்களில் பாஜக வை எந்த கட்சியால் வீழ்த்த முடியுமோ, அந்த கட்சிக்கு அல்லது அணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம். நாங்கள் டில்லியில் 8 மாதங் களாகப் போராடிப் போராடிக் களைத்துப் போய் விட்டோம் என்று ஒன்றிய பாஜக அரசு கருதுகிறது. இதனால் நாங்கள் எங்கள் போராட்டத்தைக் கைவிட்டு விடுவோம் என நினைக்கிறது. ஆனால், இப்போதுதான் எங்கள் போராட்டம் விரிவ டைந்துள்ளது.
நாங்கள் பாஜக-வுக்கு எதிரான யுத்தத்தை முன்னெ டுத்திருக்கிறோம். இந்த தேசத்து விவசாயிகளின் ஒரு வாக்குகூட பாஜகவுக்கு விழக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
செப்டம்பர் 5-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் முதலாவது மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற உள்ளது. அதில், உத்தரப் பிரதேசம், உத்தரா கண்ட், பஞ்சாப் தேர்தல் களுக்கான வியூகம் வகுக்கப் படும்.
இவ்வாறு ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment