பிச்சை எடுப்பது சமூக-பொருளாதார பிரச்சினை பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

பிச்சை எடுப்பது சமூக-பொருளாதார பிரச்சினை பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூலை 29  வறுமைதான் பிச்சை எடுக்க காரணம். பொது இடங்களிலும், டிராபிக் சிக்னல்களிலும் பிச்சை எடுப்பதை தடுக்க உத்தர விட முடியாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது.

கரோனா தொற்றை தடுக்க அமல்படுத்தப் பட்ட ஊரடங்கு காலத்தில் வீடற்றவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் மறு வாழ்வு திட்டங்களை அளிக்கக் கோரியும், தடுப்பூசி செலுத்தக் கோரியும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக பொது இடங்கள்,  டிராபிக் சிக்னல் களிலும், சந்தைகள், கோவில்கள் உள்பட பொது இடங்களில் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க தடை விதிக்க வேண்டும். பிச்சைக்காரர்களை அங்கி ருந்து அகற்ற வேண்டும் என்று டில்லியை சேர்ந்த குஷ் கல்ரா, பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதானவிசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி ஷா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது  "பிச்சைக் காரர்கள் விவகாரத்தில் வசதி படைத்தவர்களின்கண் ணோட்டத்தில் நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது. வறுமை தான் பிச்சை எடுக்க காரணம். பொது இடங்களி லும், போக்குவரத்து சிக்னல் களிலும் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கமுடியாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இது ஒரு சமூக-பொரு ளாதார பிரச்சினை.

ஏழ்மை  மட்டும் இல்லை யென்றால் யாரும் பிச்சை எடுக்க விரும்ப மாட் டார்கள். அவர்கள் பிச்சை எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று நாங்கள் கூற முடியாது" என தெரிவித்து, பொதுநல மனுவை நீதிபதிகள்தள்ளுபடி செய்தனர்.

மேலும் இந்த பொதுநல மனு தொடர்பாக ஒன்றிய அரசும், டில்லிஅரசும் பதில ளிக்க வேண்டும் என்றும் பிச்சை எடுப்பவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுவிட்டதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க  வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்

ளனர்.  வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment