டோக்கியோவில் ஒரே நாளில் 3,177 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

டோக்கியோவில் ஒரே நாளில் 3,177 பேருக்கு கரோனா பாதிப்பு

டோக்கியோ, ஜூலை 30 ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் அதிகரித்து வரும் கரோனாவால் ஒரே நாளில் 3,177 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ  நகரில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு  அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

டோக்கியோ நகரில் மேலும்  ஒரே நாளில் 2848 பேருக்கு புதிய  கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 3,177 புதிய கரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளது இத்தகவலை  டோக்கியோ பெருநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

 20 வயதிற்குட்பட்டவர்கள் (1,078 பாதிப்புகள்),  30 வயதிற்குட்பட்டவர்கள் (680) மற்றும் 40 வயதிற்குட்பட்டவர்கள் (485)388 பாதிப்புகள்  19 வயதிற்குட்பட்டவர்கள்.

டோக்கியோவில் கடுமையான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆகும்.

ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பு 169 ஆக அதிகரித்துள்ளது. இதில் வீரர்கள், அதிகாரிகள், நிர்வாகிகளும் அடங்குவர்.

இந்த ஒலிம்பிக் போட்டிகளே அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடங்காத கரோனா 2ஆவது நாளாக அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கரோனா பாசிட்டிவ் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து பதற்றம்  அதிகரித்து வருகிறது.

No comments:

Post a Comment