திரைக்கலைப் பயிற்சி நிறுவனம் உலக தரத்துக்கு மேம்படுத்தப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

திரைக்கலைப் பயிற்சி நிறுவனம் உலக தரத்துக்கு மேம்படுத்தப்படும்

செய்தித் துறை அமைச்சர் உறுதி

சென்னை, ஜூலை 30- தர மணியில் உள்ள எம்ஜி ஆர் அரசு திரைக்கலை மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், உலகத் தரத்துக்கு மேம்படுத்தப் படும் என்று செய்தித் துறைஅமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் அரசு திரைக்கலை மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை, நேற்று (29.7.2021) மாலை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது எம்ஜிஆர் திரைக்கலை மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முன் காண் திரையரங்கம், மறு ஒலிப்பதிவு திரையரங்கம், குளிரூட்டப்பட்ட படப் பிடிப்புத் தளம், மாணவர் கள் படப்பிடிப்புத் தளம், மாணவர் தங்கும் விடுதி, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் பிரிவு மற் றும் வளாகத்தில் அமைந் துள்ள ஏனைய உட்கட்ட மைப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும், மறு ஒலிப்பதிவு திரை யரங்கில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறும் படத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், ‘‘கடந்த ஜூலை 27ஆம் தேதி முதலமைச்சர் தலைமை யில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் ஆய்வுக் கூட் டத்தில், செய்தித் துறை யில் பல்வேறு ஆக்கப்பூர் வப் பணிகளையும், தொலை நோக்குத் திட்டங்களை யும் வகுக்க வேண்டும். ஆய்வுப் பணிகளை மேற் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இங்குள்ள வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நிறுவனத்தை மேம் படுத்துவது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து உலகத்தரத் துக்கு இணையாக மேம் படுத்தப்படும்’’ என்றார்.

இந்த ஆய்வின்போது வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவு லானா, தமிழ்வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநர் வீ.. ஜெயசீலன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment