மலக்குழியில் 340 பேர் மரணமடைந்த நிலையில் ஒரு உயிரிழப்புகூட இல்லையாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

மலக்குழியில் 340 பேர் மரணமடைந்த நிலையில் ஒரு உயிரிழப்புகூட இல்லையாம்!

ஒன்றிய அரசின் முரண்பட்ட தகவல்

புதுடில்லி, ஜூலை 31 நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மலக்குழி மரணம் கூட நிகழவில்லை என்று நாடாளு மன்றத்தில் ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல்- டீசல், எரிவாயு விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் நாடாளுமன்றத்தில் பற்றியெரியும் பிரச்சினைகளாக மாறியுள்ளன.இதனிடையே, சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனிதக்கழிவுகளை சுத்தம் செய்யும் போது உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எல். அனுமந்தய்யா ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த 5 ஆண்டுகளில் இது போன்ற இறப்புகள் ஒன்றுகூட பதிவாகவில்லைஎன்று கூறி  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும், இதே கேள்வி நாடாளு மன்றத்தில் எழுப்பப்பட்டு இருந்தது. அப்போது, “கடந்த அய்ந்து ஆண்டு களில், சாக்கடைகள், கழிவுநீர்த் தொட் டிகள், மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளின்போது 19 மாநி லங்களில் மட்டும் 340 பேர் உயிரிழந் துள்ளனர்என்று ஒன்றிய அரசு புள்ளிவிவரம் அளித்திருந்தது.ஆனால், மழைக்காலக் கூட்டத்தொட ரில் எழுப்பப்பட்ட அதே கேள்விக்கு, ஒரு மரணம் கூட நிகழவில்லை என மோடி

அரசு பதிலளித்துள்ளது. நான்கு மாதத்திற்கு உள்ளாகவே- அதுவும் நாடாளுமன்றத்திலேயே புள்ளிவிவர மோசடியை மோடி அரசு அரசு அரங் கேற்றியுள்ளது.

No comments:

Post a Comment