புதுடில்லி, ஜூலை 31 தமிழ்நாட்டில் கரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள் 69.2 விழுக்காடு என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது இரண்டு வகையில் பெறப்படுகிறது. ஒன்று இயற்கையானது. மற்றொன்று செயற்கையானது. நோய் பாதிப்பு ஏற்படும்போது அதனை எதிர்க்க உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு போரிடும் செல்களை உருவாக்கும். இந்த செல்கள் உள்ளே நுழைந்துள்ள கெட்ட வைரசுகளை அழிக்கும். இதன் காரணமாக நோய் விட்டு போகும். இது இயற்கையானது.
இதேபோன்று, தடுப்பூசி செலுத்தும் போது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு ஆன்டிபாடிகள் உரு வாகும். பின்னர் வைரசுகளை அவை அழிக்கும். அதனால் தான் கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.
இயற்கையாக உருவாகும் ஆன்டி பாடிகளை விட தடுப்பூசி மூலம் உருவா கும் ஆன்டிபாடிகளே அதிக காலம் நம் உடலில் இருக்கின்றன. இயற்கை முறையில் நான்கு மாதங்கள் நீடித்தால், தடுப்பூசி முறையில் ஒரு வருடம் நீடிக் கிறது. கரோனாவுக்கு எதிராகவும் இது போன்ற ஆன்டிபாடிகள் உருவாகியி ருக்கும்.
கரோனாவிலிருந்து மீண்டவர்களின் உடலில் இந்த வகை ஆன்டிபாடிகள் தோன்றியிருக்கும். இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை மக்கள் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்றுள்ளார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது.
இந்தியா முழுவதும் 70 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பரிசோதிக்கப்பட்ட்டனர். 11 மாநிலங்களில் குறைந்தது 3இல் இரு பங்கு மக்கள் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை (ஆன்டிபாடி) பெற்றுள்ளனர் என்பது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
இவற்றில் அதிக அளவாக ஒன்றிய பிரதேசத்தில் 79 விழுக்காடு மக்கள் கரோ னாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை பெற் றுள்ளனர். இதில் மிக குறைவாக கேரளா வில் 44.4% மக்கள் மட்டுமே நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்றுள்ளனர். இந்த விகிதம் தமிழ் நாட்டில் 69.2% என்ற அளவில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பன்னாட்டு பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை
ஆக.31 வரை நீட்டிப்பு
புதுடில்லி, ஜூலை 31 பன்னாட்டு விமான சேவைக்கான தடை வரும் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி திட்டமிட்ட பன்னாட்டு பயணிகள் விமானப் போக்கு வரத்து ரத்து செய்யப்பட்டது. ஆனால், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்பவும் இங்கு சிக்கிய வெளி நாட்டினர் சொந்த நாட்டுக்கு திரும்பவும் வசதியாக மே மாதம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி சிறப்பு விமானங்கள் தொடர்ந்து இயக்கப் பட்டு வருகின்றன.
எனினும், ஏற்கெனவே, திட்டமிடப்பட்ட பன்னாட்டு பயணிகள் விமான சேவைக் கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை ஜுலை 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், பன்னாட்டு விமான சேவைக் கான தடை வரும் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment