பெரியார் கேட்கும் கேள்வி! (405) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (405)

பல ஆண்டுகளுக்கு முன் பட்டிக்காட்டு மனிதன் ஒருவன் எங்கள் மண்டிக் கடையில் இருந்த பெரிய கடிகாரம் ஒன்றின் தண்டு அசைவதையும், மணி அடிப்பதையும் பார்த்ததும், கேட்டும் ஆச்சரியப்பட்டு, "இதை ஆட்டுகிற மனிதன் - இந்த மணி அடிக்கிற மனிதன் எங்கிருந்து கொண்டு இந்த வேலை செய்கிறான்?" என்று கேட்டான். நான், "அவன் சுவருக்கு அந்தப் பக்கம் இருந்து கொண்டு  அப்படிச் செய்கிறான்? என்று சொன்னேன். அதை அவன் நம்பி "இதற்கு ஒரு ஆளா? உங்களுக்கென்ன மகாராசா? எத்தனை ஆள் வேணுமென்றாலும் வைப்பீர்கள்!" என்று என்னை புகழ்ந்து மகிழ்ந்தான். அதுபோல் பட்டிக்காட்டான் பருவத்து மக்களுக்குத்தான் ஆத்மாவில் நம்பிக்கைதான் இருக்க முடியுமே தவிர, மற்றபடி அதற்கு அறிவாதாரம் என்ன இருக்க முடியும்?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

 

No comments:

Post a Comment