சென்னை, ஜூலை 29- சென்னையில் திரிசூலம், பாரிமுனை, காசிமேடு, திருவொற் றியூர், எண்ணூர் அனல் மின்நிலையம் அருகில் உள்ள செப்பாக்கம், வேளச்சேரி, தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களை தேர்வு செய்து Ôஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சிÕ எனும் அமைப்பு ஆய்வுக்கு உட்படுத்தியது.
இதன்படி, கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 24 மணி நேர தொடர் காற்று தர பரிசோதனையை நடத்தியது.
ஒரு கனமீட்டர் காற்றில் 2.5 மைக்ரான் அளவு கொண்ட காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு (PM 2.5) 60 மைக்ரோ கிராம் வரை இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் இந்த ஆய்வில் அனுமதிக்கப்பட்ட மாசு அளவை விட 4 மடங்கு அதிகமாக மாசு பதிவாகி இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
228 மைக்ரோ கிராம்களில்
இவற்றில் அதிக அளவாக, திரிசூலம், பாரிமுனை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் 176 மைக்ரோ கிராம் முதல் 228 மைக்ரோ கிராம் வரை காற்று மாசு இருந்தது.
இதேபோன்று, திருவொற்றியூர், காசிமேடு (துறைமுகம் அருகே), துரைப் பாக்கம் (குப்பை கொட்டும் வளாகம் அருகில்), குருவிமேடு (அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பல் குளம் அருகே), சோழிங்க நல்லூர் (பழைய மாமல்லபுரம் நெடுஞ்சாலை அருகில்), வேளச்சேரி, நொச்சிக் குப்பம், கொடுங்கையூர் (குப்பை கொட்டும் வளாகம்அருகில்), மீஞ்சூர், உர்ணாம்பேடு, செப்பாக்கம் (நிலக்கரி சாம்பல் குளம் அருகே) சிறீபெரும்புதூர், தியாகராயர் நகர், அத்திப்பேடு, காட்டுக்குப்பம், அம்பத்தூர் ஆகியஇடங்களில் பிஎம் 2.5 மாசு 59 முதல் 128 மைக்ரோகிராமாக இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. காட்டுப்பள்ளி குப்பத் தில் 53 மைக்ரோ கிராமாக இது இருந்தது.
இந்த ஆய்வு முடிவுகளை பார்க்கும் போது, இது அமெரிக்க காற்று தர நிர்ணய விதிகளின்படி ஆரோக்கியமற்ற நிலை யாகும். இப்பகுதியில் வாழும், இதய அல்லது நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், வயதானவர்கள், சிறார்கள் உடல் ரீதியான செயல்பாடுகளை அதிகம் மேற்கொள்ளக் கூடாது என அந்த விதிகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.
11 ஆயிரம் பேர் உயிரிழிப்பு
இதுபற்றி காற்று தர கண்காணிப்பில் ஈடுபட்ட ஆய்வாளர் விஸ்வஜா சம்பத் கூறும்போது, நிலக்கரியை எரிப்பதால் பெறப்படும் மின் பயன்பாட்டை குறைப்பது, போக்குவரத்து போன்றவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் காற்று மாசுவையும், அதனால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினை களையும் குறைக்க முடிவும். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பிற நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகள் வலுவான உள்ளூர் காற்று தர கண்காணிப்பு அமைப்பை ஏற் படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த ஆண்டு காற்று மாசுபாட்டால் 11 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர் என 'கிரீன்பீஸ்' தென்கிழக்கு ஆசியா அமைப்பின் ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது.
இதேபோன்று சென்னையில் காற்று மாசு தொடர்புடைய பொருளாதார இழப்பும் ரூ.10,910 கோடியாக உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால், சென்னை பெருநகரில் காற்றின் மாசு அதிகரித்து இருப்பது, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு மற்றொரு மறைமுக கேள்விக்குறியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment