கரோனா தடுப்பூசி போடும் வரையில் பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாரில்லை; கருத்துக்கணிப்பு முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

கரோனா தடுப்பூசி போடும் வரையில் பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாரில்லை; கருத்துக்கணிப்பு முடிவு

சென்னை, ஜூலை 29 கரோனா தடுப்பூசிபோடும் வரையில், 48 சதவீத பெற்றோர் தங்களது குழந்தை களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப விரும்பவில்லை என்பது ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கரோனா வைரஸ் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர நாடு போராடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடிய பள்ளிக்கூடங்களை எப்போது திறப்பது என்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற ஆன்லைன் தளம் நாட்டின் 361 மாவட்டங்களில், 32 ஆயிரம் பெற்றோரிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அது வருமாறு:-

எப்போது திறந்தாலும் தயார்...

* 30 சதவீத பெற்றோர், தங்கள் மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்து விட்டால் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப தயார் என்று கூறுகின்றனர்.

* 21 சதவீத பெற்றோர், பள்ளிக் கூடங்கள் எப்போது திறக்கின்றன வோ அப்போது தங்கள் குழந்தை களை அனுப்புவதற்கு தயார் என்கிறார்கள்.

தடுப்பூசி போடுகிற வரையில்

 தயார் இல்லை...

* 48 சதவீத பெற்றோர், கரோனாவுக்கு எதிராக தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிற வரையில், அவர்களை பள்ளிக் கூடங்களுக்கு அனுப்ப தயாராக இல்லை என தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா  பா... எம்.பி.க்களிடம் பேசுகையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது விரைவில் தொடங்கி விடும் என தெரிவித்தது இங்கு நினைவு கூரத்தக்கது.

இதற்கிடையே மராட்டியம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் பகுதி யளவில் இந்த மாதம் பள்ளிக் கூடங்களை திறந்துள்ளனர். ராஜஸ் தான், இமாசலப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் பளளிக்கூடங்களை திறக்கப்போவதாக அறிவித்து இருப் பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment