‘ஏர் இந்தியா’ கடன் பெயரில் ரூ. 738 கோடி விற்பனை 115 சொத்துக்களை விற்றது மோடி அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

‘ஏர் இந்தியா’ கடன் பெயரில் ரூ. 738 கோடி விற்பனை 115 சொத்துக்களை விற்றது மோடி அரசு

 புதுடில்லி, ஜூலை 31 ‘ஏர் இந் தியாவின் கடன்களை அடைக் கிறோம் என்ற பெயரில், 2015 முதல், அந்த நிறுவனத்தின் 115 சொத்துக்களை ரூ. 738 கோடிக்கு மோடி அரசு விற்பனை செய்தி ருப்பது தெரிய வந்துள்ளது.

மக்களவையில் எழுப்பப் பட்ட கேள்விக்கு ஒன்றுக்கு, சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை அளித்துள்ளார்.  அதில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.“2019 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப் படி சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி அளவிற்குஏர் இந்தியாகடனில் உள்ளது. இதனால், ‘ஏர் இந்தியாவின் கடன்களை ஈடுசெய்ய அதன் அசையா சொத்துக்கள் விற்கப்பட்டு வருகின்றன. இவ் வாறு விற்பனைக்காக, 111 சொத் துக்களைஏர் இந்தியாஅடை யாளம் கண்டுள்ளது; அவற்றில் 106  சொத்துகள் இந்தியாவில் உள் ளன, மீதமுள்ள அய்ந்து சொத் துக்கள் வெளிநாடுகளில் உள்ளன. 111 சொத்துக்கள் 211 பிரிவுகளாக உள்ளன. அவை பணமாக்கத் தக்க நிலையில் உள்ளன.

2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஜூலை 12 ஆம் தேதி வரைஏர் இந்தியாவின்  115 யூனிட்களை விற்றதன் மூலம் ரூ. 738 கோடி திரட்டப்பட்டுள்ளது. ஏஅய்எஸ் ஏஎம் (Air India Specific Alternative Mechanism - AISAM) அமைப்பு தற்போது ஏர் இந்தியாவை விற் பனை செய்யும் பணியில் ஈடு படுத்தப்பட்டு ள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள்ஏர் இந்தியாசொத்துக்களை வாங்கும் தகுதி வாய்ந்த ஆர்வமுள்ள ஏலதாரர் களுக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளதுஎன்று வி.கே. சிங் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment