புதுடில்லி தமிழ்ப் பள்ளிகளுக்கு 7 திருவள்ளுவர் சிலைகள் வி.ஜி.சந்தோஷம் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

புதுடில்லி தமிழ்ப் பள்ளிகளுக்கு 7 திருவள்ளுவர் சிலைகள் வி.ஜி.சந்தோஷம் வழங்கினார்

சென்னை, ஜூலை 28- விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, புதுடில்லியில் உள்ள டில்லித் தமிழ்க் கல்விக் கழகம் நடத்தும் ஏழு தமிழ்ப் பள்ளிகளில் 7 திருவள்ளுவர் சிலை களை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் புதுடில்லி தமிழ்க் கல்விக் கழகத் தலைவர் சூரியநாராயணனிடம் இலவசமாக திருவள்ளுவர் சிலைகளை வழங்கினார். அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, இலங்கை, தைவான், பிரான்சு, கயானா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து இந்தியாவில் ரிஷிகேஷ், அந்தமான், நவிமும்பை, விசாகப்பட்டினம் மற்றும் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் இதுவரை 122 திருவள்ளுவர் சிலைகளை நிறுவி யுள்ளது. விரைவில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் 133ஆவது திருவள்ளுவர் சிலையை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

டாக்டர் வி.ஜி.சந்தோசம் கூறுகையில், இந்தியாவின் தலைநகரமான டில்லியில், தமிழ் மொழியை வளர்த்து வரும் தமிழ்ப் பள்ளிகளில் திருவள்ளுவர் சிலைகள் நிறுவுவது பெருமை யாகவும், அதற்கு வாய்ப்பளித்த டில்லித் தமிழ்க் கல்விக் கழகத்திற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை உலகமெல்லாம் நிறுவுவதற்கும், திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்கவும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் என்றும் பாடுபட்டு வரும் என தன் உரையில் கூறினார்.

இவ்வழியனுப்பும் விழாவில் விஜிபி முதன்மை இயக்குநர் விஜிபி ராஜாதாஸ், நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம், மல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் மல்லை சத்யா மற்றும் பேராசிரியர் உலகநாயகிபழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment