தனியார் மருத்துவமனைகளின் கூட்டாண்மை சமூக பங்களிப்பு நிதியின்மூலம் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

தனியார் மருத்துவமனைகளின் கூட்டாண்மை சமூக பங்களிப்பு நிதியின்மூலம் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் இன்று (28.7.2021) சென்னை, காவேரி மருத்துவமனையில், இந்திய தொழிற் கூட்டமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கூட்டாண்மை சமூக பங்களிப்பு நிதியின் மூலம் நடத்தும் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் என்.எழிலன் மற்றும் .வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / முதன்மைச் செயலாளர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment