கரோனா காப்பீடு செய்தோருக்கு ரூ.8,000 கோடி தந்த நிறுவனங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

கரோனா காப்பீடு செய்தோருக்கு ரூ.8,000 கோடி தந்த நிறுவனங்கள்

புதுடில்லி, ஜூலை 30 நடப்பு, 2021 - 2022ஆம் நிதியாண்டின் ஏப்.,  ஜூன் வரையிலான காலாண்டில், மருத்துவ காப்பீடு செய்தோருக்கு, சிகிச்சை செலவாக, 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

இதில், கரோனா மருத்துவ சிகிச்சைக்காக, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, காப்பீடுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து எச்.டி.எப்.சி., எர்கோ ஜெனரல் காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரிதேஷ் குமார் கூறியதாவது: கரோனா இரண்டாவது அலையால், மருத்துவ காப்பீடுதாரர்களின் கோரிக்கை அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 10 லட்சத்திற்கும் அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன.

இது, கடந்த முழு நிதியாண்டில் வந்த அளவிற்கு நெருக்கமாக உள்ளது. மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள், முதல் காலாண்டில், 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, காப்பீட்டுதாரர்களுக்கு வழங்கியுள்ளன.

இதில், 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக, கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றதற்காக வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 25 சதவீத காப்பீட்டு கோரிக்கைகள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment