மின் வாகன பராமரிப்பில் களமிறங்கும் வெலக்ட்ரிக் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

மின் வாகன பராமரிப்பில் களமிறங்கும் வெலக்ட்ரிக்

புதுடில்லி, ஜூலை 30 நாட்டில், பெட் ரோல் விலை உயர்ந்து வருவதால், மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதையொட்டி மின் வாகனங்கள் பழுது பார்ப்பு, பராமரிப்பு உள்ளிட்ட சேவை களில், வெலக்ட்ரிக் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் களமிறங்கி உள்ளது.

இது குறித்து வெலக்ட்ரிக் நிறுவனர் விகாஸ் ஜெயின் கூறியதாவது:இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் இரு சக்கர வாகன துறை அடியோடு மின்மயமாக உள்ளது. அதனால், மின் வாகனங்களின் விற்பனைக்கு பிந்தைய சேவையில் களமிறங்கியுள்ளோம்.இதற்காக, ஹீரோ எலக்ட்ரிக், ஆம்பிரி, ஒகினவா உள்ளிட்ட மின் வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.

நிறுவனங்களுக்கு குத்தகையில் மின் வாகனங்களை வழங்குவது, நிதியுதவி, வீடு தேடிச் சென்று பழுது பார்ப்பது, பராமரிப்பது உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள துவங்கி உள்ளோம். அனைத்து மின் வாகனங் களின் தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் நிறுவனம் செயல்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் இரு சக்கர மின் வாகனங்களின் பராமரிப்பு சேவைகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment