'35 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளை யாட்டில் சாதிக்க முடியாது.... குறிப்பாக உயரம் தாண்டுதலில் இளையோர்களுக்கு தான் வாய்ப்பு அதிகம்' இதைக் கூறியது ரூத் பெய்டியாவை தேர்வு செய்யும் குழுவில் பெரும்பான்மையானவர்கள் கூறிய ஒன் றாகும். இப்படிக் கூறிய குழுவினரை தங்கம் வாங்கி அவர்களது எண்ணத்தை மாற்றிய வர்.
1992 ஆம் ஆண்டு பார்சலோனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியைப் பார்த்த ரூத்திற்கு விளையாட்டில் ஆர்வம் வந்தது.
கடினமான பயிற்சியை மேற்கொள்ள வெறுங்கால்களோடு களத்தில் இறங்கினார். 1998 ஆண்டு உள்ளூர் அளவில் விளையாடி பல சாதனைகளை தகர்த்தெறிந்தார்.
2002ஆம் ஆண்டு முதல்முதலாக பன் னாட்டு அளவில் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கினார்.
இவர் 2004 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். ஆனால் 16ஆவது இடத்தில் தான் முடிக்க முடிந்தது. 2008 ஒலிம்பிக் போட்டியில் 4-ஆவது இடத்திற்கு வந்தார். தங்கம் வெல்ல அதீதநம்பிக்கையுடன் இருந்த ரூத்திற்கு ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாமல் போனதை எண்ணி மனம் உடைந்து விளையாட்டை விட்டே ஒதுங் கினார்.
பின்னர் மனதை தேற்றிக்கொண்டு தங்கம் என்ற ஒற்றைக்குறிக்கோளோடு மீண்டும் விளையாட்டுப் பயிற்சியில் இறங்கினார்.
2013, 2014 ஆம் ஆண்டுகளில் மிகவும் கடினமாக உழைத்தார். 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பெய்ட்டியாவின் கடைசி வாய்ப்பு என்று ஸ்பெயின் நாட்டு ஒலிம்பிக் கமிட்டி அவரிடம் கூறிவிட்டது. 37 வயதான பெய்ட்டியா இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாது என்று கிட்டத்தட்ட அனை வருமே கூறிய நிலையில் மனம்தளராமல் புன்னகையுடன் உயரத்தைத் தாண்டத் தொடங்கினார். தனக்கு அரசு கொடுத்த வாய்ப்பு மற்றும் ஒலிம்பிக் கமிட்டி கொடுத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். 2016 பிரேசிலில் நடந்த ஒலிம் பிக் போட்டியில் மிகவும் அதிகவயதுள்ள நீளம் தாண்டுதல் வீராங்கனை என்ற முத்தி ரையோடு போட்டிகளில் கலந்து கொண்டார்.
20 ஆண்டு உழைப்பு அனைவரின் ஏச்சுபேச்சுக்களை புறந்தள்ளி அதை தங் கப்ப தக்கமாக மாற்றிக் காட்டினார்.
அவர் கடைசிப் போட்டி ஊடகவிய லாளர்களிடம் கூறியது, "கிட்டத்தட்ட அனைவருமே எனக்கு ஊக்கம் கொடுக்க எங்கள் நாட்டு விளையாட்டுத்துறை கூட முன்வரவில்லை. இதனால் எனக்கு தங்கம் வெல்லும் வேட்கை மேலும் அதிகரித்தது கடின உழைப்பு என்றால் என்ன என்று எனக்குத் தெரியும்." என்று கூறிப் பலருக்கு ஊக்கமாக அமைந்தார் பெய்ட்டியா.

No comments:
Post a Comment