உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதலமைச்சர் ஆலோசனை பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதலமைச்சர் ஆலோசனை பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை, ஜூலை 28 உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் விடுபட்டபகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல்நடத்துவது குறித்து அமைச் சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் கடந்த 2016ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையில், உள் ளாட்சித் தேர்தல் நடத்துவது தள்ளிப் போனது. இறுதியாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முதல்கட்டமாக 27 மாவட்டங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு, பிரதிநிதிகள் நியமிக்கப் பட்டனர்.

புதிய மாவட்டங்கள்

பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உரு வாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல், சென்னைஉட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் ஆகி யவை நடத்தப்படவில்லை. வார்டு வரையறை, இடஒதுக்கீடு அடிப்படை யில் வார்டுகளை நிர்ணயம் செய்வது போன்ற பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில், வரும் செப்டம் பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தமிழ்நாடு மாநில தேர் தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப் பேற்றுள்ள திமுக அரசும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கமுனைப்புடன் செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுநர் உரை யிலும் தெரிவிக்கப்பட்டது.

விரைவில் அறிவிக்கப்படும்

தேர்தல் தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் அறி விக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வா கம், ஊரக வளர்ச்சித் துறைகளின் அமைச் சர்களும் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலையும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர் தலையும் நடத்தி முடிக்க அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியா னது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு..ஸ்டா லின் நேற்று (27.7.2021) மாலை அமைச் சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வார்டு வரையறை பணி கள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், அதுதொடர்பான பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளதாககூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா ஏற்பாடுகள்

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற் றாண்டு விழா வரும் ஆகஸ்ட் 2 மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலக பழைய கட்டிடத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் நடக்க உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.

கலைஞர் படம் திறப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடக்கும் இவ்விழாவில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப் படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார். பேரவைத் தலைவர் அப்பாவு, முதலமைச்சர் மு.. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின் றனர். இந்நிலையில், விழா ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.. ஸ்டாலின் முன்னிலையில் பேரவைத் தலைவர் அப்பாவு அறையில் நேற்று (27.7.2021) மாலை ஆலோசனை நடந்தது. துரை முருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, தலைமைச் செயலர் இறையன்பு உள் ளிட்டோர் பங்கேற்றனர். விழாவுக்காக யார் யாருக்கு அழைப்பு விடுப்பது, இருக்கை ஏற்பாடு, கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து ஆலேசிக்கப்பட் டது.

No comments:

Post a Comment