இளங்கன்று பயம் அறியாது! விஷப் பாம்பால் கடிபட்ட சிறுவனின் துணிச்சல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

இளங்கன்று பயம் அறியாது! விஷப் பாம்பால் கடிபட்ட சிறுவனின் துணிச்சல்

சென்னை,ஜூலை28- காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் தர்ஷித் (வயது 7). சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆவது வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில், கடந்த 16ஆம்தேதி, அருகில் உள்ள வெள்ளகேட்டு கிராமத்தில் தனது பாட்டி வீட் டிற்கு சென்ற சிறுவன், அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் விளை யாடிக் கொண்டிருந்தான். அப் போது தன்னை ஏதோ கடிப்பது போன்று உணர்ந்த சிறுவன், அதை விரட்டி சென்று அடித்துள்ளான்.

அடித்த பிறகு தான் அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்று தெரியவந் துள்ளது. பின்னர் அந்த பாம்பை கையில் எடுத்துக்கொண்டு, பெற் றோரின் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து உள்ளான். இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு சிறுவனை மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

ஆனால் பாம்பு கடித்தால் ஏற் படும் அறிகுறிகள் எதுவும் சிறுவ னின் உடலில் தெரியாததால், 2 நாட்கள் விஷமுறிவுக்கான சிகிச்சை அளித்து சிறுவனை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு சென்ற மறுநாள், சிறுவனின் கால் வீக்கமடைந்து, உடல் நலம் மோசமடைய தொடங்கியது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் சிறுவன் அனு மதிக்கப்பட்டார். அங்கு சிறு வனை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுவனை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் பூவழகி தலைமையிலான மருத்துவர்கள் குழு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து ஒரு வார காலம் கொடிய பாம்பு விஷம் முறிக்கும் சிகிச்சை அளித்து, தற்போது சிறுவன் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளான். இதுகுறித்து குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபு ணர் மருத்துவர் சீனிவாசன் கூறும் போது, ‘சிகிச்சையின் போது ஒரு நாள் சிறுவனிடம் நாங்கள், பாம்பை எதற்கு கையில் கொண்டு வந்தாய்? என கேள்வி கேட்டோம்.

அதற்கு, ‘நான் பாம்பை கையில் கொண்டு வந்தால்தானே, என்னை எது கடித்தது என்று உங்களுக்கு தெரியும்என்று சிறுவன் பதில் அளித்தது எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ‘இளங்கன்று பயம் அறியாதுஎன்பது இந்த 7 வயது சிறுவனின் செயலில் இருந்து ஊர் ஜிதமாகியுள்ளது. உலகம் முழுவ தும் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் பாம் புக்கடிக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

பாம்பு கடித்த 3 மணி நேரத்துக் குள் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு வந்ததால், அதனால் ஏற் படும் உயிரிழப்புகளை தவிர்க்க லாம். இது தொடர்பாக பொது மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்என்றார்.

சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவினரை சந்தித்த மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் எழிலரசி வெகுவாக பாராட்டினார். அப்போது மருத் துவமனை மக்கள் தொடர்பு அதி காரி கங்காதரன் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment