டில்லி மாநகர காவல்துறை ஆணையர் நியமனத்திற்கு எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

டில்லி மாநகர காவல்துறை ஆணையர் நியமனத்திற்கு எதிர்ப்பு

சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய டில்லி அரசு

புதுடில்லி ஜூலை 31  டில்லி மாநகர காவல்ஆணையராக ராகேஷ் அஸ் தானா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து   கெஜ்ரிவால் அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

டில்லி காவல் ஆணையராக முன்னாள் சிபிஅய் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவை ஒன்றிய உள்துறை நியமித்து உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ராகேஷ் அஸ்தானா மீது ஏற்கெ னவே பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்த நிலையில், அவர் சிபிஅய் பதவியில் இருந்து ,  ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் வலியுறுத்தலின் பேரில் பதவி விலகினார். பின்னர் அவருக்கு பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப் பாதுகாப்பு படை இயக் குநர் ஜெனரல் பதவி வழங்கப்பட் டது.

இந்த நிலையில்,  தற்போது ராகேஷ் அஸ்தானாவை டில்லி காவல் ஆணையராக ஒன்றிய உள் துறை அமைச்சகம் நியமித்து உள்ளது.  இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  டில்லி காவல்துறை ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டில்லி அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ராகேஷ் அஸ்தானாவை உடனடியாக திரும்ப பெற வேண் டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு டில்லி பாஜக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. முன்னதாக  30.7.2021 அன்று  டில்லி ஜெய்சிங் மார்க் பகுதியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில், ராகேஷ் அஸ்தானா ஆணையராக பொறுப் பேற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment