மிசோராமிற்கு செல்ல வேண்டாம் தடை விதித்த அசாம் பா.ஜ.க. அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

மிசோராமிற்கு செல்ல வேண்டாம் தடை விதித்த அசாம் பா.ஜ.க. அரசு

 கவுகாத்தி ஜூலை 31  இரு மாநிலங் களுக்கு இடையே தொடரும் வன்முறை சம்பவங்கள் காரண மாக மிசோரம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அசாம் அரசு  மாநில மக்களை அறிவுறுத்தி உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான அசாமுக்கும், மிசோரத்துக்கும் இடையிலான பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்தே  எல்லைப் பிரச்சினை தொடர்பாக அவ்வப்போது கலவ ரங்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அதுபோல, கடந்த 26ஆம் தேதியன்று, பழைய எல்லைப் பிரச்சினை தொடர்பாக, இரு மாநில மக்களிடையே கலவரம் மூண்டது.  அசாம் மற்றும் மிசோராம் மாநில எல்லையில் நடைபெற்ற கலவரத்தில் குறை ந்தது 6 அசாம் காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,   மிசோரம் மாநிலத்திற்கு பயணம் மேற் கொள்ள வேண்டாம் என சொந்த மாநில மக்களுக்கு அசாம் அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அசாம்  மாநில உள்துறை   வெளியிட்ட செய்திக்குறிப்பில், அசாம், - மிசோ ரம் மாநில எல்லைப் பகுதியில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப் பாக அசாம் மாநிலத்தின் காச்சர், கரிம்ஜங், ஹைலகண்டி ஆகிய மாவட்டங்களில் வன்முறை சம்ப வங்கள் தொடர்ந்து வருகின்றன.

மாநில மக்களின் சொந்த பாது காப்பிற்கு அண்டை மாநிலத்தால் எழும் அச்சுறுத்தல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. பணி மற்றும் இதர நிமித்தங்களுக்காக மிசோரம் மாநிலத்தில் வசித்துவரும் அசாம் மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அசாம் மக்கள் மிசோரம் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட் டுள்ளது. இதுவரை அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவில் வன்முறை நடக்கும் போது தங்கள் நாட்டு மக்கள் இந்தியாவிற்குச் செல்வதை தவிர்க்கவும் என்று சொல்லி வந்தன. தற்போது ஒரு மாநில அரசே வேறு மாநிலத்திற்குச் செல்ல தடைவிதித்துள்ளது. இந்த அளவுக்கு  மோசமான நிர்வா கத்தை மோடிஅரசு  நடத்துகிறது.

No comments:

Post a Comment