கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற தனியார் பள்ளி மறுப்பு டில்லி மாநில அரசே பொறுப்பேற்று நடத்த முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற தனியார் பள்ளி மறுப்பு டில்லி மாநில அரசே பொறுப்பேற்று நடத்த முடிவு

புதுடில்லி, ஜூலை 31- புதுடில் லியில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் உயர்த்தப்பட்ட கட்ட ணத்தை குறைத்திட வேண்டும என்று டில்லி மாநில அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில்அப்பள்ளியின் நிர்வாகம் கட்டண விகிதங்களைக் குறைப்பதற்கு மறுத்துவிட்டது. அப்பள்ளியின்  நிர்வாகப் பொறுப்பை டில்லி மாநில அரசே எடுத்துக்கொள்ள தீர்மானித்திருக்கிறது.

புதுடில்லியில் மாளவியா நகர் அருகேயுள்ளஏபிஜே ஸ்கூல்என்னும் தனியார் கல்வி நிறுவ னத்தில் மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டண விகிதங்களை அதிகரித்து அறிவித்தது. இதனால் மாணவர்களின் பெற்றோர் டில்லி அரசிடம் முறையிட்டனர். இதன் அடிப்படையில்  டில்லி மாநில அரசின் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. டில்லி மாநிலத்தின் கல்வி இயக்குநரகம் மேற்படி பள்ளிக்கூடத்தின் கணக் குகளை ஆய்வு செய்தது.

2012ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை ஒவ் வோராண்டும் வசூலிக்கப்பட்ட கட்டணங்களின் மொத்த மதிப்பு ரூ.49 கோடியே 79 லட்சமாக இருந் ததும், ஆனால், அதன் செலவி னங்கள் வெறும் ரூ.18 கோடியே 87 லட்சம் மட்டுமே என்பதும் தெரியவந்தது.

இவ்வாறு நிகர உபரி 30 கோடியே 85 லட்சம் ரூபாய் கையில் இருக்கிறது. எனவே, மாணவர் கல்விக்கட்டணத்தை உயர்த்தவேண்டிய அவசியம் இல்லை என்று டில்லி அரசு முடிவு செய்தது. எனவே, அரசின் தரப்பில் பலமுறை கல்வி நிர்வாகத்திடம் கட்டணங்களை உயர்த்தக்கூடாது என வலியுறுத்தப்பட்டும் பள்ளி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.

எனவே, பெற்றோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகத்தினை டில்லி மாநில அரசே தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள முடிவு செய் திருக்கிறது. இதற்கு மாநில முதல மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்திருக்கிறார்.


No comments:

Post a Comment