மருத்துவர்கள் அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 31 கரோனா வில் இருந்து மீண்டவர்கள் 28 நாட்கள் கழித்து உடல் பரிசோ தனை செய்து கொள்வது அவ சியம் என மருத் துவர்கள் அறி வுறுத்துகின்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது:-
கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், அதன் பிறகு ஏற்படும் பாதிப்பால், மீண் டும் மருத்துவமனைகளில் அனும திக்கப்படுகின்றனர். இதை தடுக்க கரோனாவில் இருந்து குண மடைந்தவர்கள், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாளில் இருந்து, 28 நாட்கள் கழித்து, ஒரு முறை கரோ னாவுக்கு பிந்தைய கண்காணிப்பு மய்யத் துக்கு வந்து உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அந்த மய்யத்தில் பொதுநலம், இதயப் பிரிவு, சர்க்கரை நோய், உணவு பிரிவு, ரத்த நாள சிறப்பு பிரிவு, மனநலப் பிரிவு, யோகா பிரிவு, நுரையீரல் துறை மற்றும் ஆய்வக வசதி உள்பட 15 துறை களை ஒரு குடையின் கீழ் ஒருங் கிணைத்து, நோயாளிகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லாததாலும், மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமே என்ற அச்சம் இருப் பதாலும், யாரும் பரிசோ தனை செய்து கொள்வதற்கு வருவதில்லை.
ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் முதல் அலையின் போது, கரோனாவில் இருந்து மீண்ட மொத்தம் 1,327 பேர் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற் றுள்ளனர். ஆனால் 2ஆவது அலை யில் கரோனாவுக்கு பிந்தைய கண் காணிப்பு மய்யத் துக்கு வருபவர் களின் எண் ணிக்கை குறைந்துள்ளது. தினசரி 5 முதல் 6 பேர் என இதுவரை 96 பேர் மட்டுமே வந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பரிசோதனைக்கு அழைத்தாலும், ஏதேனும் சாக்குபோக்கு கூறி வர மறுத்துவிடுகின்றனர்.
இதன் காரணமாக புதிதாக சர்க்கரை நோயாலும், பக்கவாதம், ரத்த நாளங்களில் அடைப்பு உள் ளிட்ட பல்வேறு பின் விளை வுகளுடனும் மீண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் சூழல் உருவா கிறது. ரத்த நாள அடைப்பால் இது வரை 117 பேர் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். அதேபோல் கருப்பு பூஞ்சை பாதிப்பும், கரோ னாவுக்கு பிந்தைய விளைவுதான்.
எனவே கரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் முறையாக கரோனாவுக்கு பிந்தைய
பரிசோ தனை செய்து கொண்டு, அதற்கான சிகிச்சையை ஆரம் பத்திலேயே மேற் கொண்டால் இதுபோன்ற பாதிப்பு களை தவிர்க்கலாம். இதுதொடர் பாக பொதுமக்கள் விழிப்புணர் வுடன் செயல்பட வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment