நாட்டு நலனுக்கு எதிரான மிகப் பெரிய ஊழல் ரபேல் குறித்து ராகுல்காந்தி கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

நாட்டு நலனுக்கு எதிரான மிகப் பெரிய ஊழல் ரபேல் குறித்து ராகுல்காந்தி கருத்து

புதுடில்லி, ஜூலை 31 ரபேல் விமான பேர ஊழல் விவ காரத்தில் தேச நலனுக்கு எதிராக பன்னாட்டு அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு முதல் விசாரணை மேற் கொண்டு வரும் ஷெர்பா என்ற தன்னார்வ அமைப்பு, தன் னிடம் உள்ள அனைத்து ஆதா ரங்களையும் கொண்டு பிரெஞ்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக் கிறது, இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நடை பெற்று வருகிறது.

பிரெஞ்சு அமைப்பு வெளியிட் டிருக்கும் தகவலை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட் டுரைப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்  காந்தியார் கூறிய, “உனக்குத் தெரிந்த உண்மையை உரக்கச் சொல், உங்கள் கருத்துக்கு யாரும் செவிசாய்க்கவில்லை என்றா லும், உண்மை உண்மைதான்என்ற வரிகளை மேற்கோள் காட்டியிருக் கிறார்.

மேலும், “ரபேல் ஒப்பந்தத்தில் மாபெரும் ஊழல் நடந்திருக்கிறதுஎன்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

36 ரபேல் போர் விமா னங்கள் வாங்கிய விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதை 2016ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவரும் நிலையில், தற்போது இது குறித்த விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment