கழகத்தினர்மீது போடப்பட்ட வழக்குகள் : உயர்நீதிமன்றம் ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

கழகத்தினர்மீது போடப்பட்ட வழக்குகள் : உயர்நீதிமன்றம் ரத்து

சென்னை, ஜூலை 31 தந்தை பெரியார் சிலையினை சேதப் படுத்துவது, காவி சாயம் பூசுவது, அவமரியாதை செய் வது போன்ற நிகழ்வுகள் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இதனை கண்டித் துப் பல ஊர்களில் கழகத் தோழர்களும், பொது மக் களும் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததையும், குற்றப் பத்தி ரிக்கை தாக்கல் செய்ததையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தர விட்டுள்ளது.

இது சம்பந்தமான விவரம்  வருமாறு:

கோவை மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் பிரபாகரன்  கடந்த 11.09.2017 அன்று 'நீட்' தேர்வைக் கண்டித்து கோவை வெள்ள லூர் அரசு மேல் நிலைப்பள்ளி முன்புள்ள சாலையில் 'நீட்' தேர்வை ரத்து செய்ய மாண வர்கள் போராட வர வேண்டும் என்று பொது மக்களோடு சேர்ந்து ஆர்ப் பாட்டம் நடத் தினார் என்று போத்தனூர் காவல் நிலையத் தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டு பின்பு இந்திய தண் டனைச் சட்டம் 109,341,188 ஆகிய பிரிவுகளின் கீழ் கோவை மதுக்கரை குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றப்பத் திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் மற்றும் 9 தோழர்கள் மீது 09.09.2017 அன்று சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் 'நீட்' தேர்விற்கு எதிராக, பெரம்பூர் மேம்பாலத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் இந்திய தண்டனைச் சட்டம் 143,145, 147,353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை எழும்பூர் 5-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 2019 ஆம் வருடம் புதுக்கோட்டை யில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தியதைக் கண்டித்து திருவாரூர் பேருந்து நிலையத் திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திருவாரூர் கழகத் தோழர் வி.மோகன், அருண் காந்தி சுரேஷ் வரதராஜன், ஆசாத் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143,341 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருவாரூர் தலைமைக் குற்றவியல் நீதிமன் றத்தில் குற்றப்பத் திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  

வழக்குரைஞர் சு. குமாரதேவன்

மேற்கண்ட மூன்று வழக்கு களையும் ரத்து செய்ய வேண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கழக வழக்குரைஞர் சு.குமார தேவன் வழக்கு தொடுத்திருந் தார். "ஆயுதமின்றி அமைதி யான முறையில் போராடுவ தற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிமை வழங்கப் பட்டுள்ளது. மேலும் வழக்குப் பதிவு செய்த காவல் அதிகா ரியே, புலன் விசாரணை அதிகாரியாக இருந்து வழக்கு விசாரணையை நடத்தக் கூடாது _ உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு முர ணாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   மேற்கண்ட வழக்குகளில் பொது மக்களில் யாரும் சாட்சியாக விசாரிக்கப்படா மல், காவல்துறையினரே சாட் சிகளாக சேர்க்கப்பட்டிருப்பது 'இயற்கை நீதி' மற்றும் குற்ற வியல் சட்டவிதிகளுக்கு எதி ரானது" என்று வாதிட்டார்.

இதை மறுத்து, அரசு குற்ற வியல் வழக்குரைஞர் மேற்படி வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட் டுக் கொண்டார் இருதரப்பு வாதங்களைக் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் என். ஆனந்த வெங்கடேஷ் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் கழகத் தோழர்களுக்கு எதி ரான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment