சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரை எதிர்த்து இன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரை எதிர்த்து இன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆடி வெள்ளிக்கிழமை  பூஜை என்ற பெயரால், அரசின் மதச் சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக நடை பெற்ற நிகழ்வினைக் கண்டித்து கண்டனங்கள் எழுந்தன. திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்று (30.7.2021) காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், கழகத் தலைவருக்கு சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர், பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருத்தம் தெரிவித்தும், இனி வரும் காலங்களில் இதுபோல எதுவும் நிகழாவண்ணம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றும், இத்தகைய பூஜை, சடங்குகள் நடக்காதெனவும் உறுதி கூறியுள்ளதை ஏற்று, திராவிட மாணவர் கழக கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது.

மூத்த பல்கலைக் கழகமாம் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி மிகவும் பொறுப்பும், பெருமையும், கண்ணியமும் வாய்ந்த பதவி என்பதாலும், அதன் துணைவேந்தரே வருத்தம் தெரிவித்து உறுதி கூறியுள்ளதற்கு மதிப் பளிக்கும் வகையிலும் இக்கண்டன ஆர்ப்பாட் டத்தை நிறுத்துமாறு, அன்புடன் திராவிடர் மாணவர் கழகக் கண்மணிகளைக்

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை       

30.7.2021  (நேரம் காலை 10 மணி)     

No comments:

Post a Comment