புதுச்சேரி மண்டல திராவிடர் கழகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

புதுச்சேரி மண்டல திராவிடர் கழகம்

சுயமரியாதைச் சுடரொளி எம்..சண்முகம் பிறந்த நாள் திராவிடர் கழகத்தின் சார்பில் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுச்சேரி, ஜூலை 30 புதுச்சேரி மாநிலத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளை பரப் பிய தொடக்க கால திராவிடர் இயக்க முன்னோடிகளில் முதன் மையானவர் மறைந்த சுயமரியாதை சுடரொளி எம்..சண்முகம் ஆவார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தந்தை வழியில் பயணித்த டாக்டர் எம்..எஸ்.சுப்ரமணியன் அவர் களின் தந்தையார் எம்..சண்முகம் அவர்களின் பிறந்த நாள் 23.7.2021 அன்று.

புதுச்சேரி தேங்காய்திட்டு மரப்பாலம் அருகில் உள்ள சிலைக்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையிலும், புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், அமைப்பாளர் மு.குப்புசாமி ஆகி யோர் முன்னிலையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்வில் திராவிடர் கழக இளைஞரணி தோழர் அல்போன்ஸ், .சிவராசன், துரை.சிவாஜி, இரா.ஆதிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment