சிரியாவில் 1998 ஆம் ஆண்டு பிறந்தார். அய்.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் தனது பெற்றோர் மற்றும் ஒரு தம்பியைப் பறிகொடுத்தார். உயிர் பிழைத்தது அவரும் அவரது சகோதரி மட்டுமே அகதிகள் முகாமில் இருந்து தனது சகோதரியோடு வேறு நாடுகளுக்குச் செல்வோம் என்று கூறி புறப்பட்ட குழுவினரோடு எதிர்காலம் என்ன என்று தெரியாமல் தனது தங்கையை அழைத்துகொண்டு புறப்பட்டார். அவர் கள் பின் தொடர்ந்து சென்ற குழு அய் ரோப்பாவில் அகதியாக தஞ்சம் புகுவ தற்காக லெபனான் வழி துருக்கி சென்று அங்கிருந்து கடல் வழி கிரீஸ் செல்ல திட்ட மிட்டிருந்தது, பாலைவனத்தில் பல நாட்கள் கிடைத்த சிறிதளவு உணவோடு துருக்கி வந்து அங்கிருந்து கிரீஸ் நோக்கி படகில் சென்ற கூட்டத்தோடு புறப்பட்டனர்.
கிரீஸ் செல்லுவதற்கான சிறு படகில் கூட்டம் அலைமோதியது. கடலில் சென்று கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து விட்டது, அவரது கண் முன்னே பலர் தண்ணீரில் மூழ்கி மரணித்துவிட அவர் தனது தங்கையைப் காப்பாற்றி கவிழ்ந்த படகை பிடித்துகொண்டு முழு இரவை கடல் நீரிலேயே கழித்தார். அவரோடு வந்த குழுவில் சிலர் மட்டுமே உயிரோடு கவிழ்ந்த படகைப் பிடித்துகொண்டு இருந் தனர். மறுநாள் இத்தாலியக் கடற்படை அவர்களை மீட்டது, பின்னர் இரண்டு சகோதரிக்கும் ஜெர்மன் அரசு புகலிடம் வழங்கியது. அங்கு உள்ள ஒரு தேவாலய உறைவிடப் பள்ளியில் சேர்ந்தார். அப் போது விளையாட்டு தொடர்பான வகுப்பு களில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்த அவர்-ஒரு இரவு முழுவதும் கடல் நீரில் கழிந்தபோது நீச்சல் தெரியாமல் கண் முன்னே பலர் மரணித்ததைக் கண்ட அவர் தான் நீச்சல் வீராங்கனையாக வேண்டும் என்ற விருப்பத்தோடு நீச்சல் விளை யாட்டை தேர்ந்தெடுத்தார். கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் அகதிகள் அணிகள் சார்பாக யுஸ்ரா போட்டியிட்டார். இப்போது 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அகதிகள் அணிகள் சார்பாக யுஸ்ரா போட் டியிடவுள்ளார்.
அய்க்கிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று 2016இல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறை யாக ‘அகதிகள் அணி’ பங்கேற்றது. சிரியா, தெற்கு சூடான், ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அதில் பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:
Post a Comment