உலகிலேயே மிகவும் பழைமையான மலைத்தொடர் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் ஆகும், இது இமயமலை தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது, உலகிலேயே மிகவும் பழைமையான மலைத்தொடர் என்பதால் பூமியைத் தவிர பிற கோள்களில் நடந்தவற்றை இம்மலைத்தொடரில் உள்ள பல அடுக்குப் பாறைகள் மற்றும் மண் துகள்களை நன்கு ஆய்வு செய்தால் உலகிற்கு பல உண்மைகள் தெரியவரும்.
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் வயதை ஒத்த ஆண்டீஸ் மலைகள் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அம்மலைத்தொடர்களில் விண் வெளி ஆய்வு நிலையங்கள் உள்ளிட்டவைகள் இயங்குகின்றன. பூக்கும் தாவரங்களும், முதுகெலும்புள்ள விலங்குகளும் தோன்றிய டிராசிக் அல்லது திராசிக் (Triassic) காலத்தில் தோன்றிய இம்மலையை பாதுகாப்பது மனிதர்களாக பிறந்த அனை வருக்குமான கடமை. இம்மலை தமிழர்களின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகும், இதன் கிழக்குப் பகுதி சமவெளியில் உள்ள நகரங்களான மதுரை திருநெல்வேலி போன்றவைகள் வைகை மற்றும் தாமிரபரணி நதிக்கரைகளின் நாகரிகத்துடன்வாழ்ந்த மக்கள் சமூகத்தைக் கொண்டது. இன்று கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் போன்றவை திராவிட நாகரிக வரலாற்றை பறைசாற்றுபவைகள்.

No comments:
Post a Comment