கரோனாவின் முதல் அலையில் நோயெதிர்ப்பு திறன் குறைவாக உள்ள வர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இதில் குழந்தைகளும், இளைஞர்களும் பெரும் பாலும் தப்பித்துக் கொண்டனர்.
ஆனால் இரண்டாவது அலை அதற்கு முற்றிலும் நேர்மாறாகஇருக்கிறது. இதில் அனைத்து வயதினருமே பாதிக்கப்படுகின் றனர், பெரியவர்களை தாக்கும் அளவிற்கு இரண்டாவது அலை குழந்தைகளையும் தாக்குகிறது. இதில் அதிர்ச்சியான தகவல் மூன்றாவது அலை குழந்தைகளுக்கு பேரா பத்தை உண்டாக்கும் என்று கூறியுள்ளனர்.
இரண்டாவது அலையும் அதிக அள வில் குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலையின்புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும்போது இரண் டாவது அலையில் 4 மாதத்திற்குட்பட்ட கரோனவால் பாதிக்கப்படும் குழந்தை களின் எண்ணிக்கை கடும் உயர்வைக் கண் டுள்ளது. பெரியவர்களுடன் ஒப்பிடும் போது குழந்தைகள் கரோனாவில் இருந்து விரைவாக குணமடைந்து விடுகிறார்கள்.
ஆனால் அவர்களுக்கான அறிகுறிக ளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் அலையில் தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் விவரிக்க முடியாத சோர்வு மட்டுமே குழந்தைகளுக்கான அறிகுறிகளாக இருந் தன. இரண்டாம் அலையின் வைரஸ் பிறழ்வு பல்வேறு புதிய அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகளை உடனடியாக கண்டறிவது அவர்களை சரியான சமயத்தில் காப்பாற்ற உதவும்.
இரண்டாவது அலையில் அதிகமாகக் காணப்படும் கோவிட் தொற்று இரைப்பை குடல் அறிகுறிகள்,குழந்தைகளையும் அதி கம் பாதிக்கிறது. வயிற்று வலி, வீக்கம், அதிக எடை, இரைப்பை குடல் போன்றவை பாதிக்கப்படு வதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
சில குழந்தைகளுக்கு பசியின்மை ஏற் படலாம் அல்லது உணவு சாப்பிடவிருப்பம் இல்லை என்று கூறலாம். இது கவனிக்க வேண்டிய ஒரு அடையாளமாகும். வயிற் றுப் போக்கு மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியவை இப்போது கோவிட் 19 தாக்கும் குழந்தைகளை பொதுவாக பாதிக்கும் அறிகுறிகளாகும்.
இதற்கு எந்த காரணமும் இல்லை என்றாலும், குடல் சுவரில் உள்ள ஊட்டச் சத்து ஏற்றுக்கொள்ளும் நுண்ணுறுப்பு களுடன் வைரஸ் தன்னை இணைக்கத் தொடங்கும் போது இந்த பிரச்சினை ஏற்படும். இதனால் வீக்கம் மற்றும் செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும்.
102 டிகிரி பாரன்ஹீட் வரை காய்ச்சல் ஏற்படும்.மிதமான உயர் வெப்பநிலை மற்ற வழக்கமான வைரஸ் நோய்களுக்கும் பொதுவானது என்றாலும், கோவிட் காய்ச் சலுடன் சளி, வலி, பலவீனம் ஏற்படலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காய்ச்சல் 2-3 நாட்களுக்குப் பிறகு குணமாகலாம். இருப்பினும், அறிகுறி 5 நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்
தொடர்ச்சியான இருமல் அல்லது தொடர்ச்சியான சளி சுவாசக்குழாய் நோய்த்தொற்றின் அறிகுறியாகஇருக்கும்.
குணமடைய அதிக நேரம் எடுக்கும். இதனால் தொண்டை புண் கூட ஏற்படலாம். கோவிட் 19 தாக்கம் இருந்தால் குழந்தைகள் சோர்வு, மந்தநிலை, தூக்கமின்மை மற்றும் சோம்பல் ஆகியவை உடலின் நோயெ திர்ப்பு அமைப்பு தொற்று நோயை எதிர்த் துப் போராட முடியாத நிலையில் உள்ளது. பாதவெடிப்பு மற்றும் கால்விரல்கள் இறுக் கம், சதைப்பகுதியில் தடிப்புகள் மற்றும் பிற தோல் அறிகுறிகளும் பெரியவர்களைப் பாதிக்கும் எனத் தோன்றினாலும்,அவை கோவிட் 19 பாதிப்பு உள்ள குழந்தைகளில் இந்த அறிகுறிகளில் ஒன்றாகும்.
குழந்தைகளிடையே அறிகுறி தொற்று அதிகரித்தபோதிலும், குழந்தைகளுக்கு வீட்டிலேயே எளிதில் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் மருத்துவர்கள்பலமுறை வலியுறுத்தியுள்ளனர். பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் விரைவாக குழந்தைகள் விரைவில் குணமடையக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment