ஆந்திராவில் கரோனா முழுமுடக்கத் தளர்வுகள் கேளிக்கை விடுதிகள், திரையரங்கங்கள் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

ஆந்திராவில் கரோனா முழுமுடக்கத் தளர்வுகள் கேளிக்கை விடுதிகள், திரையரங்கங்கள் திறப்பு

அய்தராபாத் ஜூலை 30-  கரோனா 2ஆவது அலை கட்டுக்குள் வந்துள்ள தால், ஆந்திரா, தெலுங் கானா மாநிலங்களில் திரையரங்குகளைத் திறக்க மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன. இதனால் புதிய படங்கள் வெளியாக உள்ளது.

நாடு முழுவதும் பரவிய கரோனா 2ஆவது அலை கடுமையான தாக் கத்தை ஏற்படுத்தியது. இதனால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக பொதுமக்கள் கூடும் கோவில்கள், திரையரங்கு கள், வணிக வளாகங்கள் மூடுவது. போக்குவரத்து தடை  உள்பட கடுமை யான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது,  தொற்றுப்பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின் றன.

அதன்படி, ஆந்திரா வில், ஜூலை 30ஆம் தேதி முதல்  50 சதவிகித பார் வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அம்மாநில அரசு அனு மதி வழங்கி உள்ளது. ஏற்கெனவே ஜூலை 8ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களு டன் திரையரங்கை இயக் கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. ஆனால், திரையரங்கு உரி மையாளர்கள், திரைப் பட விநியோகஸ்தர்கள் அதை ஏற்க மறுத்துவிட் டதால், திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது.  இந்தநிலையில், தற்போது மாநில அரசு வழங்கிய தளர்வுகளில் 50 சதவீத பார்வையாளர்களு டன் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் ( 30ம் தேதி)  மாநிலம் முழுவதும்சிசென்டர்களில் உள்ள திரையரங்குகள் திறக்கப் படும்.  மேலும், 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்றும், முகக் கவசம், சமூக இடை வெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டு மென்றும் அரசு வலியு றுத்தி உள்ளது.

அதேவேளையில்  தெலங்கானா மாநிலத் தில் 100 சதவீத பார்வை யாளர்களுடன் வரும் ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க தெலங்கானா அரசு அனுமதி வழங்கி யுள்ளது. இதனால், விரை வில் புதிய தெலுங்கு திரைப் படங்கள் திரையரங்குக ளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment