தண்ணீர் பற்றாக்குறையை போக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

தண்ணீர் பற்றாக்குறையை போக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?

மக்களவையில் ஜெகத்ரட்சகன் கேள்வி

புதுடில்லி,ஜூலை 30-  இந்திய நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கவும், கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உரிய தண்ணீர் தேவையை நிறைவேற்றவும், ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? என்று அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற தி.மு.. உறுப்பினர், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் எழுத்துமூலம் எழுப்பிய கேள்விக்கு  நேற்று (29.7.2021) மக்களவையில் ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர், பிரகலாத் சிங் படேல் அளித்த பதில் வருமாறு,

அதிகரித்து வரும் மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஒவ்வொரு தனி நபருக்கும் கிடைக்கும் தண்ணீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது என்றும், புவியியல் காரணங்களினால், அனைத்துப் பகுதிகளிலும் சீரான மழையளவைப் பெறுவதில்லை என்றும், தண்ணீர், மாநிலப் பட்டியலில் இருப்பதால், நீர் நிலைகளை மேம்படுத்தும் பொறுப்பு மாநிலங்களையே சார்ந்தது என்றும், நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில், மழை நீர் சேகரிப்புத் திட்டங்களும், வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி விவசாயிகள் மகாநாடுகளும் நடத்தப்பட்டு வருவதாக இணையமைச்சர் தெரிவித்தார். மேலும், தேசிய தண்ணீர் திட்டத்தின்கீழ் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது குறித்தும், சொட்டுநீர்ப் பாசனம் குறித்தும், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், ரயில்வே அமைச்சகமும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஊக்குவித்து வருவதாகவும், நீரை மறுசுழற்சி செய்யும் முறைகளை கடைப்பிடித்து வருவதாகவும், உள்ளாட்சித் துறை நிர்வாகத்தில் ரூ.38000 கோடிக்கும் மேலாக தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க செலவழிக்கப்பட்டு வருவதாகவும், இந்திய தரக் கட்டுப்பாடு நிறுவனத்தின் ஆணைப்படி தண்ணீர் வளத்தை பாதுகாப்பதற்கான அனைத்து கொள்கை முடிவுகளும் எடுக்கப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment