துபாய், ஜூலை 29- துபாயில் கட்டப்பட்டுள்ள உல கின் மிக ஆழமான நீச்சல் குளம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது.
துபாயில் நாத் அல் செபா பகுதி அருகே உல கின் மிக ஆழமான நீச்சல் குளம் கட்டமைக்கப் பட்டுள்ளது. டீப் டைவ் என்ற நிறுவனம் இந்த நீச்சல் குளத்தை அமைத் துள்ளது. இந்த நீச்சல் குளம் மொத்தம் 197 அடி (60 மீட்டர்) ஆழம் கொண் டது ஆகும்.இதில் மொத்த தண்ணீர் கொள்ளளவு 1 கோடியே 40 லட்சம் லிட்டர் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 6 ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவா கும். இந்த ஆழமான நீச்சல் குளத்தில் ஹப்பர் பேரிக் என்ற பகுதி உள் ளது. இதில் ஒரு நகரம் தண்ணீரில் மூழ்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த நீச்சல் குளத்தில் கார் உள்ளிட்ட வாகனங் களுடன் பழைய பணி மனை போன்ற அமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவருவதாக உள்ளது. ஸ்கூபா டைவ் எனப்படும் நீர்மூழ்கி வீரர்கள் பயிற்சி பெறுவ தற்கும் வசதி செய்து தரப் பட்டுள்ளது. இந்த நீச்சல் குளம் 20 அடி மற்றும் 69 அடி ஆழத்தில் 2 பகுதி களாக பிரிக்கப்பட்டுள் ளது. தண்ணீருக்கடியில் 56 கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
சூழ்நிலைக்கேற்ப வண்ணங்கள் மற்றும் ஒளி அளவை வெளிப் படுத்தும் 164 மின் விளக் குகள் ஆழமான பகுதிக ளில் பொருத்தப்பட்டுள் ளன. ஒரே நேரத்தில் தண் ணீருக்கடியில் 100 பேர் பங்கு பெறும் நிகழ்ச்சி களையும் நடத்த வசதி உள்ளது.
ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் நீச்சல் குளத் தில் உள்ள தண்ணீர் எரி மலை பாறைகள் வழியாக சுத்திகரிப்பு செய்யப்படு கிறது. இது நாசாவின் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 10 வயதுக்கு மேற்பட்டவர் கள் இந்த நீச்சல் குளத்தில் பயிற்சி பெற வசதி செய்து தரப்பட்டுள்ளது.இதற் காக இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்து தரப் பட்டுள்ளது. இந்த பிர மாண்ட நீச்சல் குளத்தை கின்னஸ் நிறுவனம் உல கின் மிக ஆழமான நீச்சல் குளமாக சாதனையை பதிவு செய்துள்ளது குறிப் பிடத்தக்கது. இதனை துபாய் பட்டத்து இள வரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் திறந்து வைத்து பார்வையிட்டார்.
தற்போது இந்த நீச் சல்குளம் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு திறக்கப்பட்டது. இதற் காக 10 வயதுக்கு மேற் பட்டவர்கள் முன் பதிவு செய்து கொள்ள மற்றும் கட்டணங்கள் குறித்து இணையதளத்தில் விவரம் வெளியிடப்பட்டுள்
ளது.

No comments:
Post a Comment