நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலு கேள்வி
புதுடில்லி, ஜூலை 30 நாடாளு மன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, தேசியப் பாது காப்பு, வெளிநாட்டு உறவு, பெண்கள் மற்றும் குழந்தை களின் பாது காப்பு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும், பொய்யுரு (கிராபிக்ஸ்) தொழில் நுட்பத்தை தடுத்து நிறுத்த, ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவ டிக்கைகள் என்னென்ன? மனிதக் குரலை மாற்றிப் பேசும் பொய்யொலி தொழில்நுட்ப கோளாறுகளை தடைசெய்ய, இந் தியக் குற்றவியல் சட்டத்தில் வழி வகை கள் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு, ஒன்றிய மின் னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில் அளித்து கூறியதாவது:-
தனிநபர்களுக்கும், நிறுவனங் களுக்கும், பல்வேறு நாடுகளுக் கும், பாதுகாப்பு ஆபத்தை விளைவிக்கும் பொய்யுரு தொழில் நுட்பம், கணினியின் உதவியால், ஆள் மாறாட்ட வேலைகளை, இணைய தள காணொலி மூலம் செய்து, பல்வகையான தீமைகளை, விளைவித்து வருகின்றது. கணி னியின் மூலம், ஒருவருடைய அடையாளத்தை மாற்றிக் காண்பிப்பது, சட்டத்திற்கு புறம்பான, ஏமாற்றுதல் குற்ற மாகும் என்றும் இந்திய குற்ற வியல் பிரிவு 416-இன் கீழ் இவ் வகை குற்றங்கள் வரையறுக்கப் பட்டுள் ளன. ஆள்மாறாட்டம், அடையாள மோசடி ஆகிய தரவுகளை கணினி மூலம் பரப் புவோருக்கு உரிய தண்டனைகள் பெற்றுத் தரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment