நிஹா மாசிஷ் மற்றும் ஜோனா ஸ்லேட்டர்
(அரசுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிவிடுவதற்கு சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு பொது நல சேவையாளர்கள் 2018 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரது கணினிகளிலும் அதற்கான சான்றுகளை இடைச் செருகல் செய்த ஒரே ஹேக்கரினால் பாதிக்கப் பட்டவர்கள்தான் அவர்கள் என்று இப்போது புதியதாக வெளிவந்துள்ள ஃபாரன்சிக் தடயவியல் அறிக்கை முடிவு செய்துள்ளது.)
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்பவர்களை அடக்கி வைப்பதற்கான ஒரு முயற்சியாகவே வலதுசாரி குழுக்கள் கருதிய ஒரு வழக்கில் இந்த புதிய கண்டுபிடிப்புகள் புதுப்புது சந்தேகங்களை எழுப்பி உள்ளது. மிகமிக அரிதாகவே சிறைத் தண்டனையில் முடியும் கடுமையான தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் எந்த வித விசாரணையும் இன்றி 12க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் கைது செய்து சிறைகளில் அடைக்கப் பட்டனர்.
மசாசூசெட்சில் அமைந்துள்ள அர்சனால் கன்சல்டிங் என்னும் நிறுவனம் கணினிகளின் மின்னணுவியல் நகல்களையும், சுரேந்திர காட்லிங் மற்றும் ரோனா வில்சன் என்ற இந்த இரு ஆர்வலர்களின் ஈ-மெயில் கணக்குகளையும், அவர்களது பாதுகாப்பு வழக்குரைஞர்களின் வேண்டு கோளின் பேரில் பரிசீலனை செய்தது.
சட்டத்திற்கு புறம்பாக உருவாக்கப்பட்ட மென் பொருளைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத ஒரு ஹேக்கர் இந்த இருவரது கணினிகளிலும் உள்ளே நுழைந்து, அவற்றில் பல பன்னிரண்டு கோப்புகளை இடைச் செருகல் செய்துள்ளனர் என்று அர்சனால் கூறுகிறது. அரசை கவிழ்க்கும் நோக்கம் கொண்ட, தடை செய்யப்பட்ட மாவோ யிஸ்டு தீவிரவாத அமைப்புடன் இந்த இரு ஆர்வலர்களையும் தொடர்பு படுத்துவதற்கான சாட்சியங்களாக இந்த ஆவணங்கள் பின்னாட் களில் புலன் விசாரணையின் போது அடையாளம் காட்டப்பட்டன.
அர்சனால் இப்போது வெளியிட்டுள்ள அறிக்கை இந்த வழக்கில் மூன்றாவது அறிக்கை ஆகும். வில்சனின் மடிக்கணினி ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும், பிரதமர் மோடியைக் கொலை செய்வதற்கான ஒரு சதித் திட்டத்தைப் பற்றி குறிப்பிடும் ஒரு கடிதம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கோப்புகள்; அவரது கணினியில் இடைச் செருகல் செய்யப்பட்டது என்றும் முந்தைய அறிக்கைகள் முடிவு செய்தன. இந்த வழக்கில் ஒரு ஹேக்கர் சாட்சியத்தை இவ்வாறு கணினிகளில் ஊடுருவுவதன் மூலம் இடைச் செருகல் செய்துள்ளனர் என்பதை அறிவித்த முதல் பத்திரிகை வாசிங்டன் போஸ்டுதான்.
இந்த இருவரது கணினிகளையும் தாண்டி வேறு கணினிகளில் நுழைந்து, விரிவான ஒருங்கிணைந்ததொரு சட்டத்திற்குப் புறம்பான தவறான மென்பொருளைப் பயன்படுத்தி, அக் கணினிகளில் தகவல்களை இடைச் செருகல் செய்வது என்ற தனது இலக்குகளை அந்த ஹேக்கர் எட்டியுள்ளார் என்று இந்த புதிய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
பீமா கோரகான் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களை விடுதலை செய்யும்படி அய்க்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் கேட்டிருந்தனர். இந்தியாவில் உள்ள மிகமிக ஒடுக்கப்பட்ட மக் களுக்காகத் தாங்கள் செய்து வரும் பணிகளை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். குற்றம் சாட்டப் பட்டவர்கள் தங்கள் மீதான குற்றச் சாட்டுகளை மறுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆர்வலர்களில் பார்க் கின்சன் நோயாளியான ஸ்டேன் சாமி என்ற ஜெசூட் பாதிரியாரும் ஒருவர். 8 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் மே மாதத்தில் மிகமிக மோசமான உடல்நிலையுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஒரு வென்டிலேடரில் வைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 5.7.2021 அன்று இறந்து போனார். மே மாதத்தில் நடந்த நீதிமன்ற விசாரணையின் போது, தனது இறுதி நாட்களைக் கழிப்பதற்காக தனது வீட்டிற்கு செல்ல தனக்கு பிணை வழங்குமாறு நீதிபதிகளை அவர் இறைஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆர்வலர்களுக்கு எதிரான வழக் குகளை மேற்பார்வையிடும் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வுத் துறையின் ஒரு செய்தித் தொடர்பாளரான ஜெயா ராய் என்பவர், புதிய அறிக்கை பற்றிய எந்தவிதக் கேள் விகளுக்கும் பதில் அளிப்பதற்கு மறுத்துவிட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தின் முன் உள்ளது என்று அவர் கூறிய நிலையில், புலனாய்வுத் துறை எந்தக் கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.
மேற்கு இந்தியாவில் வாழும் ஒரு மனித உரிமை வழக்குரைஞரான காட்லிங்கின் ஒரு கணினியை தடயவியல் பகுத்தாய்வு மேற்கொள்வதற்கு அண் மையில் கவனம் குவிக்கப்பட்டது. வியாபார ரீதியில் கிடைக்கும் சட்டத்திற்குப் புறம்பான தவறான மென்பொருளான நெட்வையர் என்ற கருவியால் அவரது கணினி 2008ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாகவே ஊடுருவப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றமற்ற வர்கள் என்று கருதி விடுதலை செய்யவும், பிராசிக்யூஷன் வழக்கை தோற்கடிக்கவும் அர்சனாலின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய அளவில் உதவும். அர்சனாலின் முதல் அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை தள் ளுபடி செய்ய வேண்டும் என்ற ஒரு தீர்மானம் நீதிமன்றங்களுக்கு முன் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கின் பணிகளை எந்தவிதக் கட்டண மும் வாங்கிக் கொள்ளாமலேயே இந்த நிறுவனம் இதுவரை செய்து வந்துள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைவரான மார்க் ஸ்பென்சர் கூறியுள்ளார். சட்டத்திற்குப் புறம்பான தவறான மென்பொருள்களிலும் மற்றும் டிஜிடல் தடயவி யலிலும் நன்கு பயிற்சி பெற்ற மூன்று வடஅமெரிக்க வல்லுநர்கள் போஸ்ட் இதழின் வேண்டுகோளுக்கு இணங்கி சமீபத்திய அறிக்கையை மறுபரிசீலனை செய்த பிறகு, அதன் முடிவுகள் பலம் வாய்ந்ததாக இருக்கின்றன என்று கூறினர்.
காட்லிங் மற்றும் வில்சனின் கணினிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒரே தொழில் நுட்பமும் நடைமுறையும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அந்த அறிக்கை விவரிக்கிறது. இரண்டு வழக்குகளிலும், அதே சர்வருடன் தகவல் தொடர்பு வைத்துக் கொள்வதற்கான அதே போன்ற ஒரு தவறான மென்பொருளை பயன்படுத்திய ஹேக்கர், தொடக்க காலங்களில் தங்கள் இலக்குகளை ஈ-மெயில் மூலமான தாக்குதலுக்கு உட்படுத்தியுள்ளார்.
2017 ஜூலை மாதத்தின் ஒரு நாள் பிற்பகலில் அந்த ஹேக்கர் 20 நிமிட நேரத்திற்குள் அந்த இருவரது கணினிகளிலும் ஊடுருவி, இடைச் செருகல் வேலையை செய்து முடித்துவிட்டார் என்று அர்சனல் கூறுகிறது. அந்த நேரத்தில் அதே ஆவணமான, தடை செய்யப்பட்ட மாவேயிஸ்ட் தீவிரவாதக் குழுவிற்கு நிதிஉதவி செய்யும் போலியான ஆவணம் ஒன்று இந்த இரண்டு கணினிகளிலும் இடைச் செருகலாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரே ஹேக்கர்தான் அந்த இரு கணினிகளையும் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளார் என்பதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்று க்ரேசன் நிறுவனக் குழுமத்தின் தலைவர் கெவின் ரிபா கூறுகிறார். டிஜிடல் தடயவியலில் வல்லுநரான அவர் அர்ச்னலின் அறிக்கையை மறு ஆய்வு செய்துள்ளார்.
காட்லிங் மற்றும் வில்சன் மட்டுமே பாதிக்கப் பட்டவர்கள் அல்ல என்று அந்த பகுத்தாய்வு பலமாக தெரிவிக்கிறது. தவறான மென்பொருளில் தயாரிக்கப்பட்ட ஈ-மெயில் ஒன்று 2016 பிப்ரவரி மாதத்தில் காட்லிங்குக்கு மட்டுமல்லாது வேறு 14 பேர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவர் களில் இருவர் பின்னாட்களில் இந்த வழக்கில் இணை பிரதிவாதிகளாக ஆயினர். அவர்களில் ஒருவர் இறந்துபோன ஜெசூட் பாதிரியாரான சாமி. அந்த கடிதத்துடன் இணைக்கப்பட்ட தவறான மென்பொருளைத் திறந்து பார்க்கும் வேறு எவர் ஒருவரும், அவர்களது கணினிகளை கண்காணித்து, கட்டுப்படுத்த இயன்ற அந்தத் தவறான மென்பொருளை உடனடியாகப் பொருத் திப் பயன்படுத்தியே இருப்பார்கள்.
ஒரு மிகப் பெரிய குழுவின் நடவடிக்கை இதில் இருந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று ஜூயான் ஆண்டிரீஸ் குர்ரீரோ சாடே (Juan Andres Guerrero-Saad) என்ற சென்டினல்ஒன் நிறுவனத்தின் சைபர் செக்யூரிடி அச்சுறுத்தல் ஆய்வாளர் கூறுகிறார். இந்த ஹேக்கரால் இடைச் செருகல் செய்யப்பட்டவை இந்த இரண்டு கணினிகள் மட்டுமே அல்ல என்று அவற்றை ஆய்வு செய்த அர்சனால் தெரி விக்கிறது.
இரண்டு குழந்தைகளின் தந்தையான
53 வயது வழக்குரைஞர் காட்லிங் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவராவார். இந்தியாவில் நிலவும் ஜாதிகளின் ஏற்றத் தாழ்வில் அவரது சமூகம் மிகமிக இழிந்த நிலையில் இருப்பதாகும். அவரது வழக்கில் தற்போது பயன்படுத்தப்பட் டுள்ள தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட மக்களுக்குப் பணியாற்றுவதையே தனது வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு பணி யாற்றியவர். நீதிமன்ற விசாரணை இன்றி அவர் மூன்று ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார்.
நன்றி: வாசிங்டன் போஸ்ட் 06-07-2021 லிங்
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment