முத்துலட்சுமி அம்மையார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

முத்துலட்சுமி அம்மையார்

1930இல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார்சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பதுஎனும் மசோ தாவை அறிமுகப்படுத்தினார்.பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம் மசோதா, இந்து கோவில் வளாகங்களிலோ அல்லது வேறு வழிபாட்டு இடங்களிலோபொட்டுக் கட்டும் சடங்குநடத்துவது சட்டத்திற்குப் புறம்பானதாகும் என அறி வித்தது. தேவதாசிகள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்ட பூர்வமான அனுமதியை வழங்கியது. மேலும் தேவதாசி முறைக்கு உதவிசெய்கிற தூண்டிவிடுகிற குற்றத்தை செய் வோர்க்கு குறைந்த பட்சம் அய்ந்தாண்டு சிறை தண்டனை என ஆணையிட்டது. இம்மசோதா சட்டமாக மாறுவதற்கு 15 ஆண்டுகள் காத்திருந்தது.

பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு  இஸ்ரேல் என்ற தேசம் 1948இல்  உருவாவதற்கு முன் பாலஸ்தீனில்  வாழ்ந்த அரேபியர்களுக்கும் அவர்கள் வம்சாவளியினருக்குமாக உருவாக்கப்பட்ட ஒரு பரந்த அமைப்பு இதுவாகும். இரகசியமாக செயல்பட்டுவந்த எதிர்ப்பு இயக்கங்கள் தங்களை  ஒருங்கிணைக்க 1964இல் உருவாக்கப்பட்ட  அமைப்பாகும். இவ்வமைப்பின் முக்கிய தலைவர் யாசர் அராபத் ஆவார்.

No comments:

Post a Comment