தனது கணினியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்படும் சான்றுகள் அனைத்தும் சட்டவிரோதமாக இடைச் செருகல் செய்யப்பட்டது: ஸ்டேன் சாமி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

தனது கணினியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்படும் சான்றுகள் அனைத்தும் சட்டவிரோதமாக இடைச் செருகல் செய்யப்பட்டது: ஸ்டேன் சாமி

நிஹா மாசிஷ் மற்றும் ஜோனா ஸ்லேட்டர் 

("அரசுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிவிடுவதற்கு சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு பொதுநல சேவையாளர்கள் 2018 ஆம்  ஆண்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரது  கணினிகளிலும் அதற்கான சான்றுகளை இடைச் செருகல் செய்த ஒரே ஹேக்கரினால் பாதிக்கப் பட்டவர்கள்தான்" என்று இப்போது புதியதாக வெளிவந்துள்ள ஃபாரன்சிக் தடயவியல் அறிக்கை முடிவு செய்துள்ளது )

கடந்த ஆண்டு தேசிய புலனாய்வுத் துறையில் விசாரிக்கப்பட்ட போது 83 வயதான பாதிரியாரான ஸ்டேன்

சாமியிடம் அவரது மடிக்கணினியில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் குறைந்தது  மூன்று முறை காட்டப்பட்ட போது, அவை தன்னுடையது அல்ல என்றும், பிறரால் இடைச் செருகல் செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார் என்று ஃபாதர் சாலமன் கூறுகிறார்.

கடந்த ஆண்டு தேசிய புலனாய்வுத் துறையில் விசாரிக்கப்பட்ட போது, எல்கார் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 நபர்களில் ஒருவரான, மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காக பணியாற்றிய பொதுநல சேவையாளர் ஜெசூட் பாதிரியார் ஸ்டேன் சாமி, அதிகாரிகள் திருட்டுத்தனமாக, சட்டத்திற்குப் புறம்பாக தனது கணினியில் ஆவணங்களை இடைச் செருகல் செய்துள்ளனர் என்று அவர்களிடம் தெரிவித்தார் என்று  அவருடன் செயலாற்றும் தோழர் ஒருவர்  தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தேசிய புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்ட போது, 83 வயதான இந்த பாதிரியாரிடம் அவரது மடிக்கணினியில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறி காட்டப்பட்ட ஆவணங்கள் தன்னுடையது அல்ல என்றும் இடைச் செருகல் செய்யப்பட்டவை என்றும் குறைந்தது மூன்று நிகழ்வுகளில் அவர் மறுத்துள்ளார் என்று, ஜார்கண்ட் மாநில மலைவாழ் மக்களுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஸ்டேன் சாமியால் உருவாக்கப்பட்ட பகய்ச்சா என்ற அமைப்பின் இயக்குநரான ஃபாதர் சாலமன் கூறுகிறார்.

"ஜூலை 28, ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 6 ஆம் தேதிகளில், ஸ்டேன் சாமி பாதிரியாரின் கணினியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது என்று கூறி அவரிடம் அந்த ஆவணங்கள் காட்டப்பட்டன. அவை தனது கணினியில் எப்போதுமே  இருக்கவில்லை என்று  பாதிரியார் கூறினார்.  அவர்களது கணினி ஹேக் செய்யப்படுவதற்கு இயலக்கூடும் என்பதை அவரிடம் நான் விளக்கும்போது, 83 வயதான அவர் தொடக்கத்தில் திகைத்துப் போனார். அதன் பிறகு, மெல்ல மெல்ல நிலைமையைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார். அவரது கணியில் இருந்தன என்று அவரிடம் காட்டப்பட்ட ஆவணங்கள் வேறு யாரோ ஒருவரால் இடைச் செருகல் செய்து அவற்றை அவருடையது என்று நிலை நாட்ட அதிகாரிகள் முயற்சி  செய்துள்ளனர் என்று காணொலிக் காட்சி  மூலம் மேற்கொண்ட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பாதிரியார் சாலமனும், ஸ்டேன் சாமியின் குடும்ப உறுப்பினர்களும், சக பணியாளர்களும், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்குரைஞர்களும் கலந்து கொண்டு பேசினர்  என்று சாலமன் கூறினார்.  தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களுடன் சாமிக்கு தொடர்புகள் இருந்தன என்று எடுத்துக் காட்டும் சொற்றொடர்கள் அவரது கடிதங்களில் சேர்க்கப்பட்டிருந்தன என்றும் சாலமன் கூறுகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினரால் ராஞ்சியின் பகைச்சா பகுதியில் இருந்து சாமி கைது செய்யப்பட்டு அதற்கு அடுத்த நாளே ஸ்டேன் சாமி மும்பைக்குக் கொண்டு வரப்பட்டார். அன்றைய தினமே தேசிய புலனாய்வு அமைப்பு அவர் மீது ஒரு குற்ற அறிக்கை பதிவு செய்தது. சதித் திட்டத்தில்   அவர் ஈடுபட்டதற்கான ஆவணங்களும்,  பிரச்சார செய்திகளும் சாமியின் கணினியில் இருந்து கண்டு எடுக்கப் பட்டன என்று கூறப்பட்டது.  அர்சனால் கன்சல்டிங் என்ற அமெரிக்க தடயவியல்  நிறுவனம் தெரிவித்துள்ளபடி, இந்த ஆவணங்கள் எல்லாம் ஸ்டேன் சாமியுடையது அல்ல என்றும், வேறு எவரோ ஒருவரால் இடைச் செருகல் மூலம் அவரது கணினியில் ஹேக் செய்து சேர்க்கப் பட்டுள்ளது என்பது பற்றி ஒரு சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று காணொலிக் காட்சி மூலம் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில்,  பாதிரியார் சாலமனும், ஸ்டேன் சாமியின் குடும்ப உறுப்பினர்களும், சக பணியாளர்களும், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்குரைஞர்களும் கோரினர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரேனா வில்சனின் வழக்குரைஞர்களிடம் இருந்து 2018 ஆம் ஆண்டில் பூனே காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மின்னணுவியல் ஆவண நகல்களின் அடிப்படையில் வில்சன் கைது செய்யப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே 2016 ஆம் ஆண்டில் வில்சனை அந்தக் குற்றத்தில் தொடர்பு கொள்ளச் செய்யும் சாட்சியம் ஒரு ஹேக்கரால் அவரது கணினியில் இடைச் செருகலாக சேர்க்கப்பட்டுள்ளது என்று அர்சனால் கன்சல்டிங் கூறியுள்ளது.

தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை நீக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் சுதந்திரமானதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி மும்பை உயர்நீதி மன்றத்தில் வில்சன் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த கோரிக்கையை வலியுறுத்திய குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களும், சக பணியாளர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனே பிணை அளிக்க வேண்டும் என்று கோரினர்.

2018 ஆம் ஆண்டுக்கும் 2020 ஆம் ஆண்டுக்கும் இடையே கைது செய்யப்பட்ட 16 குற்றம் சாட்டப்பட்டவர்களில் எவர் ஒருவருக்கும் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த காணொலிக் காட்சி பத்திரிகையாளர் சந்திப்பில்,  உயிரியல் மதிப்பிடுவதற்கான உயிரியல் வடிவமைப்பு மய்யத்தின் இணைப் பேராசிரியர் ஜெடிடியா கிராண்டல் (Jedidiah Grandall, Associate Professor of Biodesign  Centre for Biocomputing, Security and Society)என்பவரும் கான்பூர் அய்.அய்.டி.யின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பேராசிரியர் சந்தீப் குப்தா என்பவரும் கலந்து கொண்டனர். டிஜிட்டல் ஆலோசகரின் அறிக்கையைப் பரிசீலனை செய்த பிறகு, வில்சனின் மின்னணுவியல் கருவி (கணினி) ரிமோட் ஆக்ஸஸ் டிரோஜான் (Remote Access Trojan)   என்ற கருவியின் மூலம் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் இடைச் செருகல்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை அந்த அறிக்கை காட்டுகிறது என்று அவர்கள் இருவரும் கூறி உள்ளார்கள். இத்தகைய தவறான மென்பொருள்களை, பொருளாதார ஆதாயத்திற்காக ஒருவரது கணினியின் பாஸ்வேர்டை அறிந்து கொண்டு செயல்படுவது அரிதானது அல்ல என்றாலும், குற்றம் சாட்டப் பட்ட வில்சன் என்ற தனிமனிதரை இலக்காகக் கொண்டு அவரது செயல்பாடுகளைக்  கண்காணிப்பதற்கு எடுத்துக் கொள்ளப் பட்டுள்ள நேரத்தில் அவரை அந்தக் குற்றச்சாட்டில் தொடர்பு படுத்திக் காட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள  தொடர்ந்த தீவிரமான முயற்சியையே அது  காட்டுகிறது என்று கிராண்டல் கூறுகிறார்.

நன்றி: 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' 06-7-2021

தமிழில்: .. பாலகிருட்டிணன்.

No comments:

Post a Comment